×
 

இதெல்லாம் தப்புங்க..! செங்கோட்டையனை வைத்து கட்சியை உடைக்கும் பாஜக..? இ.பி.எஸ் எடுத்த பகீர் முடிவு..!

அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாகவே கசியவிடுகிறார்கள். இதன் மூலம் அதிமுகவுக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி தாங்கள் நினைத்ததைச் சாதிக்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச் 25 ஆம் தேதி திடீரென டெல்லிக்கு சென்று இரவில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இருவரும் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

அதன்பின், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் மார்ச் 28 அன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து அவசரமாக விமானம் மூலம் திடீரென டெல்லி சென்றார்.டெல்லி சென்ற அவர், இரவு 7 மணிக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு தொழில் அதிபர்கள் ஸ்ரீதர், வெங்கட்ராமன் ஆகியோர் சென்றதாகக் கூறப்படுகிறது. இரவு நிர்மலா சீதாராமன் வீட்டில் செங்கோட்டையன் உணவு உண்டார்.

இந்தச் சந்திப்பு முடிந்ததும் நிர்மலா சீதாராமன், செங்கோட்டையன் ஆகிய இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது என தகவல்கள் வெளியாகின. இவை அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.அவரை ஓபிஎஸ்,டிடிவிதினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசுகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து மர்மம் நீடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது

இதையும் படிங்க: அடித்து ஆடும் பாஜக… திமுக ஆட்சியை முடித்துவிட சூப்பர் ப்ளான்… எடுத்தெறியப்படும் எடப்பாடியார்..!

.

இந்நிலையில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்துப் பேசினார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை சோழா நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாகவே கசியவிடுகிறார்கள். இதன் மூலம் அதிமுகவுக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி தாங்கள் நினைத்ததைச் சாதிக்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்தது பல்வேறு பிரளயங்களை கிளப்பிய நிலையில் மீண்டும் சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளது எடப்பாடியார் தரப்பை கடும் அதிர்க்குள்ளாக்கி இருக்கிறது. ஏற்படுத்தியது. இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால், திடீர் ட்விஸ்டாக பிரதமர் மோடியை சந்திப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று தமிழகம் வருகிறார். மதுரைக்கு 3.50 மணிக்கு விமானநிலையம் வந்தடைகிறார். அங்கு முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது தன்னை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும் நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால், அமித்ஷாவை சந்தித்த உடனேயே தன் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் பேசியது, அதைத் தொடர்ந்து தம்பித்துரை, சி.வி.சண்முகம் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணிக்கு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்திருந்தார்.

மீண்டும் சென்னையில் செங்கோட்டையனை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற எடப்பாடி பழனிசாமி,  கட்சியை உடைக்கும் பணியை பாஜக செய்து வருவதாகக் கருதுகிறார்.அத்துடன் ஓ.பி.எஸ், டிடிவி. தினகரன், அண்ணாமலை ஆகியோரை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கியிருந்தார். இந்தத் தகவலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவந்தது. இதனால் மோடியை வரிசையில் அவர்களுடன் நின்று சந்திக்க விரும்பவில்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, மோடியை சந்திப்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்” - மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டரால் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share