×
 

லாபத்தில் பிஎஸ்என்எல்! 17 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ரூ.262 கோடி..!

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 2007ம் ஆண்டுக்குப்பின் முதல்முறையாக நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.262கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப்பின் பிஎஸ்என்எல் நிறுவனம் முதல்முறையாக லாபம் ஈட்டியுள்ளது. வாடிக்கையாளர்களை அதிகமாகச் சேர்த்தது, நெட்வொர்க்கை வேகமாக வரிவுபடுத்தியது, விலையை அதிகப்படுத்தியது போன்ற நடவடிக்கையால் பிஎஸ்என்எல் லாபம் ஈட்டியது. பிஎஸ்என்எல் சிஎம்டி ஏ ராபர்ட் ஜே ரவி வெளியிட்ட அறிக்கையில் “ நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் எங்கள் நிதிச் செயல்பாடில் மகிழ்ச்சியடைகிறோம். இது புத்தாக்கம், வாடிக்கையாளர் மனநிறைவு மற்றும் தீவிரமான நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றில் எங்கள் கவனம் அதிகரித்துள்ளது.

இந்த முயற்சியால் வரும் நிதியாண்டு முடிவுக்குள் வருமானம் 20 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கிறோம்.
வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தேசிய வைபை ரோமிங், அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் பிஐடிவி, அனைத்து எப்டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கும் ஐஎப்டிவி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேசத்தை கட்டி எழுப்புதல் என்ற பெயரில் அதானியின் பைகளை நிரப்புகிறார் - பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்

தரமான சேவை, உறுதியான சேவை ஆகியவை வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகரிக்கும், நம்பிக்கையை அதிகப்படுத்தும், நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் மாறும். 5ஜி சேவைக்கான தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம், டிஜிட்டல் மாற்றம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மேலும் உதவும். ” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1800 கோடி இழப்பில் இருந்தது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக பிஎஸ்என்எல் நிறுவனம் கடைபிடித்த செலவுக்குறைப்பு நடவடிக்கை, நிதிச்சிக்கனம், வாடிக்கையாளர் சேர்ப்பு, நெட்வொர்க்விரிவாக்கம் ஆகியவற்றால் இழப்பிலிருந்து மீண்டு ரூ.262 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.
மொபைல் வருவாய் 15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஃபைபர் டூ தி ஹோம் மூலம் வருவாய் 18 சதவீதம் உயர்ந்துள்ளது, லேண்ட் லைன் வருவாயும் 14% அதிகரித்துள்ளது என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை ரூ.6ஆயிரம் கோடிக்கான நிதித்தொகுப்பை பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு அறிவித்தது. இதன் மூலம் 4ஜி சேவையை விரிவுபடுத்துதல், இணைப்பை மேம்படுத்துதல், தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்ய வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றுகிறதா திமுக அரசு... கேள்வி எழுப்பும் அறப்போர் இயக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share