×
 

வக்ஃபு வழக்கு: ஆணியே புடுங்காமல் 'க்ரெடிட்' திருடும் விஜய்- ஆதவ்..? பகீர் குற்றச்சாட்டு

ஒன்றுமே செய்யாமல் செய்ததாக க்ரெடிட் எடுத்துக் கொள்வது எப்படி என விஜயையும், ஆதவ் அர்ஜூனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களின் உரிமைகள் தொடர்பான வக்பு வாரியத்தைப் பாதிக்கும் என்ற கவலையால், தவெக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விஜய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, வழக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்து இருந்தார். விஜய்யின் இந்த எதிர்ப்பு, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது, ஆனால் சிலர் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் விமர்சிக்கின்றனர். 

இந்நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டம் 2025-ன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, ​​அரசின் தரப்பைக் கேட்காமல் வக்ஃப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று துஷார் மேத்தா வாதிட்டார். பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விஜய், ''வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

 

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியா? வெளியான பரபரப்பு தகவல்!!

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. 

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறி இருந்தார்.

இதனை விமர்சித்துள்ள பலரும், வக்ஃபு மசோதாவுக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த வழக்கின் Diary Number 17837/2025. வழக்கு பாத்தியப்பட்ட நாள் 4/4/2025. தவெக வழக்கு பதிவு செய்த நாள் 13/4/2025

ஒன்றுமே செய்யாமல் செய்ததாக க்ரெடிட் எடுத்துக் கொள்வது எப்படி என விஜயையும், ஆதவ் அர்ஜூனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகதான் நாடாளுமன்றத்தில் ஜாயிண்ட் கமிட்டி போக முக்கியம் காரணம்.  முதலில் வழக்கு தொடர்ந்தது திமுக.  நீங்கள் திமுகவை பார்த்து  வழக்கு போடுவேன் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்கள். ஜாயிண்ட் கமிட்டிக்கு சென்றதே திமுகவால்தான்'' என திமுகவினரும் தன் பங்குக்கு தவெகவை குதறி வருகிறார்கள். 

இதையும் படிங்க: த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம்..! விஜய் தேர்வு செய்த முதல் மண்டலம் இது தான்..!

ஆனால்,  ''வக்ஃப் சொத்து இவை என்பதை ஆட்சியர்கள் முடிவு செய்வது இயலாத காரியம்; அதில் பல பிரச்னைகள் உள்ளன; வக்ஃப் சட்டத் திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் உள்ளன, அவை குறிப்பட்ட மதத்தினரை ஒடுக்குவதாக உள்ளது'' என நேற்று வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதத்தை வைத்திருந்தார்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share