சவுக்கு சங்கர் வீடு மலம் வீசி தாக்குதல்.. வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி.!!
சென்னையில் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
சென்னை - கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வசித்து வரும் ஆச்சிமுத்துவின் மனைவியான கமலா (68) என்பவர் இன்று காலை தன் வீட்டில் சுமார் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து, தன்னை அவதூறாக பேசியதோடு, கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மனுவாகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் இந்த மனு மீதான விசாரணையை மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலைய மனு மேல் விசாரணைக்காக சிபிசிஐடி (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர். தனது பேட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்தே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோபாலபுரம் கும்பலின் குண்டர் படை.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஹெச். ராஜா.!!
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!