×
 

அமைச்சர் பொன்முடிக்குச் சிக்கல்..! சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும், அவரது மகனுமான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் கிளம்பியது. 

இதன்மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். 

இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி?

செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர் கைது.. தலைமறைவாக இருந்தவரை தட்டி தூக்கியது போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share