சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: இதயத்தை கிழித்த கொடூரம்.. 4 துண்டுகளாக வெட்டப்பட்ட கல்லீரல் ......பகீர் தகவல்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கொடூர கொலை வழக்கு பிரேத விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதயம் தனியாக பிடுங்கி வெளியே எடுத்து கிழிக்கப்பட்டிருந்தது. கல்லீரல் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தன. தலையில் 15 எலும்பு முறிவு காணப்பட்டது." தங்கள் அனுபவத்தில் பார்த்திராத காட்டுமிராண்டித்தனமான கொலை" என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்தனர். 28 வயது முகேஷ் சந்திரகர், சத்தீஸ்கர் மாநில பத்திரிகையாளரான 28 வயது முகேஷ் சந்திரகர், உள்ளூர் செய்தி சேனலில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். கழிவுநீர் தொட்டியில் உடல் இவரை கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி முதல் காணவில்லை. உறவினர்களும் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சுரேஷ் சந்திரகர் என்ற காண்டிராக்டரின் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் (செப்டிக் டேங்க்) அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. ரூ. 120 கோடி ஊழலை அம்பலப்படுத்தியவர்
காண்டிராக்டர் சுரேஷ் பஸ்தார் பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தில் 120 கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய செய்தியாளர் முகேஷ் அது தொடர்பான புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: சோளக்காட்டில் சித்ரவதை ..பெண்ண சிதைத்த கொடூரனை தட்டி தூக்கிய போலீஸ் ..!
இதனால் ஆத்திரமடைந்த கான்டிராக்டர் சுரேஷ் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. முன்னதாக காண்டி டாக்டரின் சகோதரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர் காணாமல் போய்விட்டதாகவும், அவருடைய தொலைபேசி அணைக்கப்பட்டதாகவும் முகேஷின் சகோதரர் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த வழக்கில் துப்பு துலக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் பிரேத விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் மிகவும் மிருகத்தனமான முறையில் இந்த கொலையை அரங்கேற்றி இருக்கும் பகீர் தகவல் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
அதாவது உடலில் இருந்து இதயத்தை தனியாக பிடுங்கி எடுத்து கிழிக்கப்பட்டு இருந்தது. கல்லீரல் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தன. உடைந்த விலா எலும்பில் ஐந்து இடங்களில் முறிவு ஏற்பட்டிருந்தன. தலையில் 15 எலும்பு முறிவுகள் இருந்தன. கழுத்துப் பகுதியும் உடைந்து இருந்தது. தங்கள் 12 வருட பணியில் இது போன்ற ஒரு கொடூரத்தை பார்த்ததில்லை என்று டாக்டர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மாவோயிஸ்ட்) முகேஷ் சந்திரகர் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. டாக்டர்களின் கருத்துப்படி கொலை குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் மேல் இருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் சாலை கட்டுமான திட்டங்களில் ஊழலை அம்பலப்படுத்திய செய்தியாளரை பாராட்டிய அந்த அமைப்பு," மக்கள், அரசியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம் பத்திரிகையாளர் முகேஷ் தனது கடமையை கடமையாக செய்தார்" என்றும் பாராட்டி இருக்கிறது.
போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து முக்கியகொலையாளியான காண்டிராக்டர் சுரேஷ் சந்திரகர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அவருடைய சகோதரர்களான தினேஷ் சந்திரகர் மற்றும் ரித்தேஷ் சந்திரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
தலை மறவாகிவிட்ட சுரேஷ் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சில சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனது தாய்- 4 தங்கைகளை துடிக்கத் துடிக்கக் கொன்ற மகன்... லாட்ஜில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!