முதல்வரின் போதை இல்லா விளம்பரம்… வெறும் ஒன்றரை மாதத்தில் இத்தனை கோடிகள் செலவா..?
குறிப்பாக அவர்களது கலைஞர் செய்திகளுக்கு மட்டும் ரூ53 லட்சத்து 46 ஆயிரத்து 830 வழங்கப்பட்டு இருக்கிறது. இது எவ்வகையில் நியாயமாகும்?
தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். தனியார் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்கள் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஒருஒபுறம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசு மறுபுறம் அமோகமாக நடைபெற்று வரும் கள்ள மது விற்பனையை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறது என்கிற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் மோதல் உச்சம்..! புது ரூட் பிடித்த ஸ்டாலின்- உருவானது மாநில சுயாட்சி உயர்மட்டக்குழு
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் சென்னை மத்தியத் தொகுதியில் இருந்து தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, முதல்வரின் போதை இல்லா தமிழக விளம்பரத்திற்காக செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவபரங்களை கோரி இருந்தார்.
இதற்கான திமுக அரசின் விளம்பர செலவு குறித்த ஆர்டிஐ அளித்துள்ள தகவலில் வெறும் "ஒன்றரை மாதங்களில்" தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி ஊடகங்களுக்கு செலவான தொகை சுமார் 4 கோடி எனக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், ஒன்றை மாதத்திற்கே ரூ.4 கோடி செலவு என்றால், வருடத்திற்கு எவ்வளவு செலவு என்று கணக்கிட்டு பாருங்கள். ஒரு பக்கம் கடை கடையாக டாஸ்மாக்கை திறந்து வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் போதை ஒழிப்பு என்று விளம்பரத்திற்கே கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது கலைஞர் செய்திகளுக்கு மட்டும் ரூ53 லட்சத்து 46 ஆயிரத்து 830 வழங்கப்பட்டு இருக்கிறது. இது எவ்வகையில் நியாயமாகும்?
2023 மார்ச் ஏப்ரல் மே மூன்று மாதத்தில் மட்டும் அச்சு ஊடக பத்திரிகைகளுக்கு தமிழ்நாடு திமுக அரசு விளம்பர செலவு மட்டும் 50- 60 கோடி மக்களின் வரிப்பணத்தை செலவு செய்துள்ளனர்'' எனக் கொந்தளித்து வருகிறனர்.
இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!