×
 

நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!

நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள் இணைந்து உள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. 

நடிகர் விஜய் தற்பொழுது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அசத்தி வருகிறார். இந்தக் கட்சி ஆரம்பித்த பின்பு அதனுடைய பெயர் வெளியீட்டு விழா முதல் விக்கிரவாண்டியில் நடைபெற்ற "முதல் மாநாடு" வரைக்கும் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் பேசாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது தமிழக வெற்றி கழகம்.

இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டு விழாவை தனது தொண்டர்களுடன் கொண்டாடிய நடிகர் விஜயை குறித்து, 'ப்ளூ சட்டை மாறன்' காட்டமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும் நடிகர் விஜய் சைவ உணவுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அதனை தனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பரப்புவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்தப் பதிவால், கடுப்பான நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்தனர்.

இதையும் படிங்க: தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்த படமான லியோ-2 படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் விஜய் கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். அதனைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே,  பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி  உள்ளிட்ட சக நடிகர்களுடன் இப்படத்தை நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

அனிரூத்தின் மிரட்டும் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் கேரியரில் கடைசி படமாக பார்க்கப்படுவதால் கண்டிப்பாக இப்படம் வெற்றி அதையும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனநாயகன் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இப்படி இருக்க, ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சக நடிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்களும் இணைந்து உள்ளனர் என்ற இனிப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட  பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.


 இந்த மூன்று இயக்குநர்களும் நடிகர் விஜயை வைத்து படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் ஒரு ஸ்வீட் ஹார்ட். .!புகழ்ந்து தள்ளிய பாலிவுட் சூப்பர் ஹீரோ

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share