×
 

மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்காததற்கு காரணம் இதுதான்..! ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதிலுக்கு கிடைத்த வெகுமானம்..!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை தான் இயக்காததற்கு உரிய காரணத்தை கூறி இருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

இதுவரை தமிழ் திரையுலகில் வந்த அம்மன் படங்களிலே சற்று வித்தியாசமாகவும் அனைவரையும் சிந்திக்கவும் வைத்த படம் தான் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம். இப்படத்தில் அம்மனை அழைக்க ஆர்.ஜே.பாலாஜி பாடும் பாடல் தான் ஹைலேட். "உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம்" என பாலாஜி பாடும் பொழுதெல்லாம் அம்மன் வந்து தோன்றி பேசுவார். பகவதி பாபா எனும் சாமியார் பஞ்சவனம் என்று கூறி காடுகளை அழிக்க போவதாகவும் அதனை தடுக்க அம்மனே இறங்கி வந்து உதவுவதாகவும் இப்படம் அமையும். அதுமட்டுமல்லாமல் கடவுள் உங்களிடம் நேரடியாவே பேசுவார் என அம்மன் கூறி மேடையில் இருந்து மறையும் காட்சிகள் அனைவரையும் புல்லறிக்க செய்தது.

இப்படிபட்ட அருமையான அம்மன் திரைப்படத்தை, ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் எப்பொழுது எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க, இந்த முறை, "மூக்குத்தி அம்மன்- 2"-ஐ நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ், சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ், ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் மிக பிரம்மாண்டமாக பெரிய கோயில் போன்ற தொரு செட் அமைத்து படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பூ,மீனா மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன்-2" கிட்டத்தட்ட ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் நிலையில், பூஜையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஏன் இல்லை? என ரசிகர்கள் கேட்டு கொண்டே இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், தற்பொழுது தான் அப்படத்தில் இல்லை என அவர் கூறியுள்ளார். 

இப்படத்தை பற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், "மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்த பிறகு, அப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்து கொண்டும், தன்னிடம் பேசி கொண்டும் இருந்தார்கள். ஆனால், எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த விதமான ஐடியாவும் இல்லை. ஏனெனில் என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வேறு  படங்களில் இருக்கின்றது.

இந்த இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவது தனக்கு மகிழ்ச்சியே. காரணம் அவர் தான் முதலில்  என்னை சினிமாவில் அறிமுகம் செய்தார். அவர் எடுப்பதுதான் சரியாகவும் இருக்கும் என அவரிடமே நான் சொல்லித்தான் இப்படத்தை அவர் இயக்குகிறார் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பிரம்மாண்டமான கோயில் செட்.. சிவப்பு உடையில் நயன்தாரா.. களைகட்டிய மூக்குத்தி அம்மன் பட பூஜை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share