×
 

200 லோடு செம்மண் மாயம்... ரூ.30 லட்சம் திருட்டு... ஊருக்கு முன் நாறிப்போன திமுக தலைவர் Vs து.தலைவர் மோதல்..!

ஆலப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவரை துணைத்தலைவர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கியதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். 

ஆலப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவரை துணைத்தலைவர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கியதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். 

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி உள்ளது இந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  தொழிற்பயிற்சி நிலையம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அந்த ஊராட்சியில் செயல்பட்டு வருகின்றன .  இதில் தலைவராக பரிமளா உள்ளார் துணைத்தலைவராக சத்யா கோபிநாத்தும் உள்ளனர்.

 ஒன்பது வார்டுகள் உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் ஆரம்பம் முதலே தலைவர் துணைத் தலைவர் என போட்டோ போட்டி போட்டுக் கொண்டு இவரை அவர் நீக்குவது அவரை இவர் நீக்குவது போன்ற செயல்பாடுகளால் ஊராட்சி நிர்வாகமே முடங்கிய நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஏ.கே.செங்கோட்டையன்... முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்...!

தற்போது ஊராட்சியில் லட்சக்கணக்கில் நிதி இருந்தும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என துணைத்தலைவர் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்று அலுவலகத்தில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப் போவதாக தெரிவித்தனர் இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் முதல்வர் வருகைக்காக சுத்தம் செய்வது போல் 200 லோடு செம்மண்ணை திருடியதாக திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் திருமலை மீது துணைத்தலைவர் சத்யா அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.

அலுவலகத்தின் எதிரே ரோட்டில் தலைவர் துணைத் தலைவர் இருவரும் மாறி மாறி  பரஸ்பர குற்றச்சாட்டுகளை அலுவலகம் அடித்துக் கொள்ளாத நிலையில் பேசிக் கொண்டிருந்தனர். துணைத் தலைவர் கட்டிங் கேட்பதாக தலைவர் குற்றச்சாட்ட,  தலைவர் மீது 30 லட்ச ரூபாய் பணம் திருடியதாக துணைத் தலைவர் குற்றச்சாட்ட என இருதரப்பிலும் நடுரோட்டில் நின்று மாறி, மாறி குற்றச்சாட்டிக் கொண்டனர். இதனை ஒட்டுமொத்த ஊர்மக்களும் வேடிக்கை பார்த்த அவலமும் அரங்கேறியது. 

இதையும் படிங்க: பட்டாசு கிளப்பும் திமுகவினர்..! அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியது கொண்டாட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share