×
 

வேஷம் போடுறாங்க... கட்சி ஆரம்பிச்சதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறாங்க... சீமான், விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!

புதிதாக கட்சி தொடங்கிய சிலர் உழைக்காமலேயே ஆட்சிக்கு வர துடிப்பதாக தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடினார்.

புதிதாக கட்சி தொடங்கிய சிலர் உழைக்காமலேயே ஆட்சிக்கு வர துடிப்பதாக தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடினார். எதிரிகள் இருந்தால் தான் திமுக மேலும் மேலும் வளரும் எனக்கூறிய ஸ்டாலின், சூரியனைப் பார்த்து கூரைப்பவர்களுக்குத் தான் வாய் வலிக்கும் என்றார். 

ஓட்டுமொத்த தமிழ் இனத்திற்காக உழைக்க வேண்டும் என்று தான் இந்த இயக்கம் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு, படிப்படியாகக் கழகம் வளர்ந்து வளர்ந்து, 1957-ஆம் ஆண்டு, முதல் தேர்தல் களத்திலே நாம் ஈடுபட்டோம். 1949-இல் தொடங்கி, 1957-இல்தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. 

இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!

காரணம், அவர்களையெல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்குத் தயாராக இல்லை. அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நானாக இருந்தாலும் சரி; தம்பி உதயநிதியாக இருந்தாலும் சரி; அண்ணன் துரைமுருகனாக இருந்தாலும் சரி, என்ன சொன்னோம்? மாற்றுக் கட்சி என்றுதான் சொன்னோம். அந்தக் கட்சியின் பெயரைக்கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சிகள் இருக்கிறது... எத்தனையோ கட்சியின் பெயரைச் சொல்கிறோம்.

ஆனால், இந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல நாங்கள் மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக இருந்து மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்து - மக்களுக்காக உழைக்கும் கட்சியாக இருந்து உண்மையிலேயே, தமிழர்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். வேஷமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றார். 

இதையும் படிங்க: கொச்சை வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்த சீமான்... பெரியார் குறித்த கேள்வியால் உச்சக்கட்ட கோபம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share