×
 

கோவை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த வேண்டும்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் இனி ஆண்டுதோறும் தைப்பூசம், சித்திரை திருவிழா தேரோட்டத்தை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோயிலில் தைப்பூசம், சித்திரை திருவிழாவையொட்டி 200 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 28 ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தப்படாததால், தேரோட்ட திருவிழா நடத்த அறநிலைய துறைக்கு உத்தரவிடக் கோரி இந்து கோவில்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முத்து கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், கொரனா பேரிடர், கோவில் திருப்பணி, குடமுழுக்கு உள்ளிட்ட காரணங்களால் கடந்த  2021 முதல் 2024 ம் ஆண்டு வரை தேரோட்டம் நடத்தப்படவில்லை என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதி தைப்பூச தேர் திருவிழா நடத்தப்பட்டதாகவும், சித்திரை திருவிழாவை யொட்டி வரும் மே 10 ம் தேதி தேர் திருவிழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எமனாகிய ராஜநாகம்..! விஷம் ஏறி பாம்புப்பிடி வீரர் சந்தோஷ் மரணம்..!

அரசு தரப்பில், கோவை உக்கடம் பகுதி பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் தேரோட்டம் நடத்த  நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்த  தலைமை நீதிபதி அமர்வு,  கோவை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இனி ஆண்டுதோறும் எந்த இடையூறு இல்லாமல் தடையின்றி நடத்த வேண்டும் எனவும் தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான காவல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு.. தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி மனு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share