×
 

கலைச்சிவிட்டியே கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை அப்புல தூக்கி டப்புன்னு கீழ போட்ட காங்கிரஸ் எம்.பி..!

அதிமுகவை ஆஹா ஓஹோ என புகழ்வது போல் புகழ்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியே காலியாகிவிடும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்,  பாஜக அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து பாஜகவினர் காட்டும்  ஆர்வத்தைவிட அதிமுகவினர் காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஏனெனில் அண்ணாதிமுகான் என்பது ஒரு சாதாரண கட்சி அல்ல,  தமிழ்நாட்டை பல ஆண்டுகள் ஆண்ட கட்சி. ஆளுமை மிக்கவர்கள் அந்த கட்சிக்கு தலைமை தாங்கினார்கள். அந்த கட்சியோடு யாராவது கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அந்த கட்சியை நாடிவந்த காலம் போய், இப்பொழுது அவர்கள் ஓடி ஓடி டெல்லிக்கு சென்று கூட்டணி வைக்கிறார்கள். 

இதையும் படிங்க: எப்படி இருந்த அதிமுக இப்படி ஆயிடுச்சி.. அதிமுகவுக்காக உச் கொட்டும் கார்த்தி சிதம்பரம்.!

 அது மட்டுமல்ல டெல்லியில் இருக்கும் பாஜகவுடைய தலைமை, அதிமுகவின் நம்பர் டூ, நம்பர் த்ரீ, நம்பர் 4-யைக் கூட கூட நேரடியா கூப்பிடுறாங்க. முன்னாடி எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவில் இருந்து ஒருகுறிப்பிட்ட நபரை அனுப்புவார்கள். ஆனால் இப்போது அதுகூட யார் என்பதை பாஜக தான் முடிவெடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு பொதுச்செயளரை கூப்பிடுகிறார்கள், அதுக்கப்புறம் பொதுச்செயலாளராக வேண்டும் என்று விரும்புவரை கூப்பிடுகிறார்கள். அவருக்கு வந்து பதவி கொடுக்கிறார்.

 என்னை பொறுத்தவரைக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை மிகவும் சிறுமைப்படுத்தி விட்டார்கள். இனிமே அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி என சொல்லிக்கொள்ள முடியாது. பாஜகவுடைய துணைக்கட்சியாக தான் செயல்பட வேண்டியிருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை தாங்குகிற கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி தொடரும், என்னை பொறுத்தவரைக்கும் இந்த கூட்டணி 2026 ஆம் ஆண்டு தேர்தலிலே அமோக வெற்றியும் பெறும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார். 

இதையும் படிங்க: உ.பி.யில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்..? யோகியிடம் ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share