×
 

விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  ''தமிழகத்தில் விஜய் செல்வாக்கு மிக்க நடிகர். அதனால் அவரைப் பார்ப்பதற்காக அனைவரும் வருவது இயல்புதான். ஒரு வேளை விஜய் சிவகாசி வந்தால் நாங்கள் கூட ஓரமாக நின்று அவரை பார்ப்போம். ஆனால், கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.



2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேல் பிரச்சாரத்திற்கு வந்தார். அவரைப் பார்க்க கூட்டம் கூடியது. ஆனால், திமுகவுக்கு ஓட்டு கிடைக்கவில்லை. நடிகருக்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆர் உடன் முடிந்துவிட்டது. எம்ஜிஆர் நடிப்பு மூலம் மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினார். 1957இல் எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தார். 1967இல் எம்எல்ஏ ஆகி, தனிக்கட்சி தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றினார். அவருடைய ரசிகர்களை பொதுத் தொண்டில் ஈடுபட வைத்து, அரசியலுக்கு கொண்டு வந்தார். அதன்பின் கட்சி தொடங்கிதான் தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

அவரைப்போல் ஆகலாம் என அனைவரும் நினைப்பது மிகவும் தவறு. அது நடக்கவே நடக்காது. திமுகவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதிமுகவின் தலைமையை ஏற்றால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அதிமுகவில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் பல தேர்தல்களை கண்ட தளபதிகள். அதனால், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி நிச்சயம்' என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இதையும் படிங்க: திமுக வெற்றியை அடித்து நொறுக்கிய அதிமுக..! என்எல்சி தொழிற்சங்க தேர்தலில் வேட்டு..!

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share