தலித் வன்கொடுமை… நாங்களே களத்தில் இறங்குகிறோம் முதல்வரே..! பா.ரஞ்சித் கிடுக்குப்பிடி..!
இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்.
''தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வீர்களா முதல்வர் அவர்களே..?'' என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களில் ஒருவன் பதில்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டு இருந்தார். “அப்பா” எனும் பொறுப்பு, அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? கல்விக்காக நிறைய செய்ய வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா? டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! பாலியல் குற்றங்கள், வெளிமாவட்டப் பயணங்கள்,பற்றி எரிந்த மணிப்பூர் என்கிற தலைப்புகளில் பேசியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குநர் ப.ரஞ்சித், ''தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி பதவி...கமலுக்கும், வைகோவுக்கும் கிடைக்குமா? மோதும் சிபிஎம்...தேமுதிகவுக்கு கிடைக்குமா?
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது… https://t.co/t4Bruzfhal
— pa.ranjith (@beemji) February 15, 2025
"அப்பா": கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், "தலைவர்" என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், "முதல்வர்" என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை "அப்பா" என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த "அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது'' என உங்களின் ஒருவன் நிகழ்ச்சியில் பேசி இருந்தார் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு கடைசி ஓராண்டு... திமுகவினரை வெறுப்பேற்றும் அண்ணாமலை..!