நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
சட்ட சபையில் 110 விதியின் கீழ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த நிலையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 17) மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர் .
இதையும் படிங்க: நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை.. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்..!
கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ரூ.120 கோடியில் தூர்வாரும் பணிகள்.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்..!