×
 

திடீரென உடைந்த ரோலர் கோஸ்டர்.. அந்தரத்தில் இருந்து விழுந்த பெண்.. வருங்கால கணவன் முன் நடந்த சோகம்..!

டெல்லியில் பொழுதுபோக்குப் பூங்காவில் ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி சாணக்யபுரியை சேர்ந்தவர் பிரியங்கா ராவத் (வயது 24). அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நொய்டாவில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை செய்து வந்துள்ளார்.  அப்போது நஜாப்கரை சேர்ந்த நிகில் என்வருக்கும் பிரியங்காவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து தங்கள் காதல் விவகாரத்தைப் பெற்றோரிடம் கூறவே, இதற்கு அவர்களும் சம்மந்தம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்தாண்டு பிப்ரவரியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தென்மேற்கு டெல்லியில் கபாஷெரா என்னும் பகுதிக்கு அருகே உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் ( Fun and Food Village) என்னும் பொழுது போக்கு பூங்காவிற்கு  (Amusement park) பிரியங்கா ராவத் மற்றும் நிகில் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளனர். அதிகாலையிலேயே அங்கு சென்ற ஜோடி அனைத்து நீர் விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தது.

மாலை ஆனதும் இருவரும் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ய முடிவு செய்தனர். மாலை 6.15 மணி அளவில் இந்த ஜோடி ரோலர் கோஸ்டரில் பயணம் செய்துள்ளது. 20 உயரத்தில் செல்லும் போது சேப்டி பெல்ட் சரிவர வேலை செய்யாததால், அந்தரத்தில் இருந்து பிரியங்கா கீழே விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: முதலில் இபிஎஸ், பிறகு அண்ணாமலை, இப்போது செங்கோட்டையன்.. என்ன தான் நடக்கிறது டெல்லியில்..?

அதைப்பார்த்த நிகில அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது வலது கால் முறிந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாங்கா குறித்து நிகில் போலீசாருக்கு தகவல் அளித்தார். பிரியங்காவை அருகில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு பிரியங்கா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிகில் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து பிரியங்காவின் சகோதரர் மோஹித் கூறியதாவது, அந்தப் பூங்காவில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. என் சகோதரி மிகவும் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால்தான் அவர் உயிர் இழந்தார். இப்போதுதான் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி, ரோலர் கோஸ்டர் உட்பட, பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டிருக்கிறது என்றார். விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதனிடையே போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர். 

அப்போது பிரியங்கா சுமார் 20 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், இருக்கை பெல்ட் சரியாக வேலை செய்யாத காரணத்தால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. மேலும், ரோலர் கோஸ்டரின் இயந்திரத்தை ஆய்வு செய்த போது முறையாகப் பயன்படுத்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாகப் பூங்காவின் உரிமையாளர்,பூங்காவின் ஆபரேட்டர், மேற்பார்வையாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பொழுதுபோக்குப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் 2 பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய ஆம் ஆத்மி அரசு.. கிழித்து தொங்கவிட்ட பாஜக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share