களத்தில் குதித்த இன்ப நிதி..! வாடி வாசலில் இருந்து வெளிவந்த கருணாநிதி கொள்ளு பேரன்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அமைச்சர் உதயநிதி, மகன் இன்பநிதியுடன் பங்கேற்றிருப்பது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது.
அலங்காநல்லூர் வாடிவாசல் வரை வந்த இன்பநிதி, அடுத்து அரசியல் களத்திற்கான வாரிசாக தயார் செய்யப்படுகிறாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
பொன்னாடை போர்த்தி வரவேற்ற அமைச்சர்:
மதுரையில் உலகப்புகழ் பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதற்காக மனைவி கிருத்திகா, மகன் இன்ப நிதியுடன் மதுரை விமான நிலையம் வந்தடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி!
இதனிடையே, இன்று காலை அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது தந்தை உதயநிதி ஸ்டாலின் அருகே நின்றிருந்த இன்பநிதிக்கும் பொன்னாடை போர்த்தினார். இதனைப் பார்க்கும் போது திமுக இன்பநிதியை அடுத்த அரசியல் வாரிசாக தயார்படுத்த ஆரம்பித்துவிட்டதோ? என்ற சந்தேகம் எழுவதாக சோசியல் மீடியாக்களில் கமெண்ட் குவிந்து வருகிறது.
சீனியர் அமைச்சர் ஒருவர், துணை முதல்வரின் மகன், முதலமைச்சரின் பேரன் என்ற ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பதவியிலும் இல்லாத இன்பநிதிக்கு பொன்னாடை போர்த்தியது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்த இன்பநிதி?@GowriSankarD_ @VetrivelEPS2026 pic.twitter.com/LF5jj7GTbp
— 👑 கடுங்கோன் 🗡️ #யார்_அந்த_SIR? (@kadunkonn) January 16, 2025
சமீப காலமாக அப்பா உதயநிதியுடன் பொது நிகழ்ச்சிகளில் இன்பநிதி தலைக்காட்டி வருகிறார். இது அடுத்த தலைமுறையை அரசியலில் இறக்குவதற்கான முன்னோட்டமாக திமுக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளை மகனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவே மாவட்டந்தோறும் உதயநிதி, இன்பநிதியுடன் விஜயம் செய்கிறார் என்ற பேச்சும் அடிபடாமல் இல்லை.
மேடையில் நடந்த சம்பவம்:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதி மேடையில் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்கப் போராடிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரனுக்கு நாற்காலி கொடுக்காமல், இன்பநிதிக்கு பின்னால் நிற்கவைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இன்பநிதிக்கு இருக்கை கொடுத்தது போதாது என்று, அவருடன் வந்தநண்பனுக்கும் முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. “இன்பநிதி தன்னுடன் வந்த நண்பனை முன்னால் வரும் படி அழைக்கிறார், இதனைப் பார்த்த மூத்த அமைச்சர் மூர்த்தி அவரே எழுந்து மேடையில் அமர்ந்திருந்த சிலரை நகர்ந்து உட்காரச் சொல்லுகிறார். இன்பநிதியின் நண்பனை வலுக்கட்டாயமாக அழைத்து முன்னால் உட்கார சொல்கிறார்” இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வரும் எதிர்க்கட்சியினர் அமைச்சரின் இந்த செயல், திமுக தலைமைக்கான அடுத்த வாரிசை வரவேற்ப்பது போல் உள்ளதாக விமர்சித்துள்ளனர்.
கருணாநிதியின் கொள்ளுப்பேரன்:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதையும் கடந்து, திமுகவின் இளைஞரணி செயலராக இருந்த போதே மு.க. ஸ்டாலின் மீது வெளிச்சம் படர ஆரம்பித்தபோது, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தாலும் திமுகவின் பகுதி செயலாளராக ஆரம்பித்து, தலைவராக உயர்ந்தவர் ஸ்டாலின், அவர் மீது அப்படிப்பட்ட குற்றச்சாட்டை யாரும் முன்வைக்க முடியாது என திமுகவினர் தெரிவிப்பதை பல முறை கேட்டிருப்போம். ஆனால் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்திலோ எல்லாமே தலைகீழாக மாறியது. அப்பாவைப் போலவே இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.சீட் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து அவர் அமைச்சராக அறிவிக்கப்பட்ட போது, திமுக தனது வழக்கமான வாரிசு அரசியலைக் கையில் எடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனை மறுத்த திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் அனைவருமே முதலமைச்சரின் மகன் என்பதால் திறமையான நபர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாதா?. இங்கே எந்த கட்சியில் தான் வாரிசு அரசியல் இல்லை என வக்காலத்து வாங்கினார்கள். இதில் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த அளவிற்கு ஸ்ட்ராங்காக அவர்களால் பேச முடியவில்லை என்பதே உண்மை.
இப்போது கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், சிட்டிங் சி.எம். ஆன மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி மீது வாரிசு அரசியலின் வெளிச்சம் பட ஆரம்பித்துள்ளது. திமுகவில் வாரிசு அரசியல் வலுப்பெறக் காரணமே, அக்கட்சியின் தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்வதால் தான் என்ற குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை.
ஏனெனில் 2023ம் ஆண்டு இன்பநிதி பாசாறை என்ற பெயரில் புதுக்கோட்டை முழுவதும் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. திமுகவில் அப்பா, மகன், பேரன் என ஆரம்பித்தது தற்போது கொள்ளுப் பேரன் வரை நீடிப்பதாக அதிமுக கடுமையாக விமர்சித்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை கூட்டோடு பொறுப்பிலிருந்து நீக்கியது திமுக தலைமை. அதன் பின்னர் திமுகவில் இன்பநிதி குறித்த சலசலப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மூலமாக மீண்டும் வெடித்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் உதயநிதியும், இன்பநிதியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, “திமுகவில் அடுத்த வாரிசு உதயமாகிவிட்டார்” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ? இன்பநிதியின் அலங்காநல்லூர் விசிட் தமிழக அரசியலில் தீவிர கவனம் பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...