ரூ.500 முதலீடு... இன்று 16.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு... இதுதான் திருபாய் அம்பானியின் கதை..!
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.16.60 லட்சம் கோடி. முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்களில் ஒருவர்.
அம்பானி குடும்பத்தின் பெயர் இன்று இந்தியாவில் மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் உள்ள பணக்கார, வெற்றிகரமான குடும்பங்களில் மந்திரமாக ஒலிக்கிறது. திருபாய் அம்பானி தனது கடின உழைப்பு, போராட்டம், தனித்துவமான பார்வையால் இந்த நற்பெயருக்கு அடித்தளம் அமைத்தார். வறுமையில் இருந்தாலும் பெரிய வெற்றிகளை அடைய முடியும் என்பதன் அடையாளமே அவரது வாழ்க்கை.
திருபாய் அம்பானி 1932 டிசம்பர் 28 அன்று குஜராத்தின் சோர்வாட் கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். பொருளாதாரச் சிக்கல் காரணமாக 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. 17 வயதில், தனது குடும்பத்திற்கு உதவ, ஏமன் நாட்டிற்கு சென்றார். ஏடன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை. அங்கு அவருக்கு மாதம் ரூ.300 சம்பளம்.
அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் குறைந்த நாட்களிலேயே பெட்ரோல் பங்கில் மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.
1954ம் ஆண்டு திருபாய் இந்தியா திரும்பினார். 500 ரூபாய் சேமிப்பு, பெரிய கனவுகளுடன், மும்பையில் ஒரு சிறிய அறையில் இருந்து ரிலையன்ஸ் காமர்ஸ் கார்ப்பரேஷனைத் தொடங்கினார். இவரது நிறுவனம் பாலியஸ்டர் நூலை இறக்குமதி செய்து, மசாலா பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி 1966ல் விமல் பிராண்டுடன் ஜவுளித்துறையில் நுழைந்தார்.
இதையும் படிங்க: ‘‘அன்பின் ஆடே..!‘ சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலையை ‘பிரியாணி’ஆக்கிய திமுக ஐடிவிங்..!
இந்த பிராண்ட் விரைவில் இந்திய சந்தையில் பிரபலமடைந்தது. திருபாய் தனது அடையாளத்தை நிறுவினார். ஜவுளியுடன், திருபாய் பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு என பிற துறைகளிலும் விரிவடைந்தது. தொழிலை விரிவுபடுத்தியது மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்தார். அவரது தொலைநோக்கு, தலைமைத்துவ திறன்களால் 2000 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இந்தியாவின் நம்பர்- 1 நிறுவனத்தை ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கியது.
திருபாய் அம்பானி 6 ஜூலை 2002ல் இறந்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அவரது சேவைக்காக 2016 ல் பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மரபு அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோரால் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.16.60 லட்சம் கோடி. முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்களில் ஒருவர்.
ஆம்.. திருபாய் அம்பானியின் பிறந்த நாள் இன்று..!
இதையும் படிங்க: மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது ஏன்..? 14 ஆண்டு கால மவுனம் உடைத்த சோனியா காந்தி..!