டாப்-4ல் திமுக, சிபிஐ: 2022-23 நிதியாண்டில் நன்கொடை பெற்றதில் பிஆர்எஸ் கட்சி முதலிடம்...
கடந்த 2023-23ம் நிதியாண்டில் மாநில கட்சிகள் நன்கொடை பெற்றவகையில் தெலங்கானாவில் உள்ள பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளன. திமுக 4வது இடத்தில் இருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன்படி அரசியல்கட்சிகள் பிரிவு 29சி(1)ன் கீழ் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ஒருவரிடம் இருந்து நன்கொடை பெற்று குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து,100 சதவீதம் வரிவிலக்கு பெறலாம். அதன்படி விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு
2022-23 நிதியாண்டில் பிராந்தியக் கட்சிகள் சார்பில் ரூ.216.17 கோடி பெறப்பட்டுள்ளது. அதில் 70 சதவீதம் நிதியை பிஆர்எஸ் கட்சி பெற்றுள்ளது. டாப்-5 பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சேர்ந்து 90.56 சதவீத நன்கொடையை பெற்றுள்ளன.
இதில் பிஆர்எஸ் கட்சி மட்டும் 47 நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.154.03 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 5 நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.16 கோடியை நன்கொடையாகப் பெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி ரூ.11.92 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதில் தெலங்குபேசும் மாநிலங்களில் 3 கட்சிகளைத் தவிர்த்து தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிக நன்கொடை பெற்றுள்ளன.
57 மாநில அரசியல் கட்சிகளில் 18 கட்சிகள் தங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளன. இதில் நாகா மக்கள் முன்னணி, பிஜூ ஜனதா தளம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், கோவா முற்போக்கு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, இந்திய லோக் தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி ஆகிய கட்சிகள் எந்த நன்கொடையும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளன.
கடந்த 2021-22 நிதியாண்டோடு ஒப்பிடுகையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜேஜேபி, டிடிபி, ஏஐடிசி ஆகிய கட்சிகளின் நன்கொடை சதவீதம் அளவு உயர்ந்துள்ளது.
இதில் ஜார்க்கணட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியின் நன்கொடை சதவீதம் 3685 சதவீதம் அதிகரித்துள்ளது, டிடிபி கட்சியின் நன்கொடை சதவீதம் 1997 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ‘திராவிடம் என்றால் வயிறு எரிகிறது... அதிமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை... சிரிப்புத்தான் வருகிறது...’ கோப-தாபத்துடன் முழங்கிய மு.க.ஸ்டாலின்
இதில் தேமுதிக, ஜிஎப்பி, எம்ஜிபி, சமாஜ்வாதி, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகளின் நன்கொடை சதவீதம் முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 99.24 சதவீதம் வரை கடுமையாகச் சரிந்துள்ளது. அதாவு,
என்டிபிபி, மற்றும் அஇஅதிமுக கட்சிகள் கடந்த 2021-22 நிதியாண்டில் எந்த நன்கொடையும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளன. ஆனால், 2022-23 நிதியாண்டில் நன்கொடை விவரங்களை தெரிவித்தன.
ஒட்டுமொத்தமாக ரூ.216.765 கோடி நன்கொடையை மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நிலையில் அதில் 43 நன்கொடையாளர்கள் ரூ.21.45 லட்சத்தை ரொக்கப்பணமாக அளித்துள்ளனர். அதிகபட்சமாக ரூ.14.20 லட்சம் நன்கொடையை ரொக்கப்பணமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.7.25 லட்சம் ரொக்கமாகப் பெற்றுள்ளது. நன்கொடை வழங்கியவர்களில் ரொக்கமாக ரூ.9.09 லட்சத்தை கேரளாவில் உள்ள நன்கொடையாளர்களும், அடுத்தார்போல் மேற்கு வங்கத்தில் ரூ.5.91 லட்சம் ரொக்கமாகவும் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? - திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!