மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத திமுக ..அடித்து தொங்கவிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத ஆட்சி இந்த திமுக ஆட்சி
நிதி இல்லை நிதி இல்லை சொல்கின்ற நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரதும் பெயரிலுமே நிதி உள்ளது எனவும் திமுகவை மேடையில் வைத்து கிழித்து தொங்கவிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுகூட்டம், நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,அதனை தொடர்ந்து பேசிய அவர்,அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பில் ரூபாய் 2500 ரூபாய் கொடுத்தபோது எதிர்க்கட்சி ஆக இருந்த திமுக மக்களுக்கு இந்த பணம் போதாது 5000 ரூபாய் தர வேண்டும் என்று வாய்க்கூசாமல் பேசிய திமுக இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு 500 ரூபாய் கூட தர வக்கில்லாமல் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றும்,பொங்கல் தொகுப்பில் 2000 ரூபாய் தர வேண்டும் ஆனால் நீங்கள் நிதியில்லை நிதி இல்லை சொல்கின்ற நீங்கள் உங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரதும் பெயிரியிலுமே நிதி உள்ளது என விமர்சனம் செய்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் எந்த ஒரு வசதிகளும் இல்லாத காரணத்தினால் தான் தினம்தோறும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று நடந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
செம்மரக்கட்டைகளை வெட்டி நம்ம தமிழ்மக்கள் ஆந்திர மாநிலத்தின் உள்ள சிறைச்சாலையில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள் எனவும், அதற்கு காரணம் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் சென்று செம்மரகட்டை வெட்டும் நிலைமையை ஏற்படுத்தியது இந்த ஆட்சியாளர்கள் தான் என்றும், வெறும் வாய் வார்த்தை பேசி வரும் ஆட்சியாளர்கள் மத்தியில் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்று பாதுகாவலனாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேரடியாக சென்று நிதி உதவிகளை வழங்கி அவர்களது துயரில் பங்கேற்று உண்மையான தெய்வமாக சாட்சியாக வாழ்ந்தவர் நமது கேப்டன் என்றும், செம்மர கட்டையை வைத்து இன்றைக்கு படம் ஒன்று எடுத்துள்ளார்கள் புஷ்பா பாகம் 1, புஷ்பா பாகம் 2 என்று ஆனால் உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் விஜயகாந்த் என்று மேடையில் கைகளால் செய்கை செய்து சூளுரை ஆற்றினார்.
மேலும் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில் தமிழக அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்கிறார்கள் மினி எமர்ஜென்சி அடக்குமுறை சட்டம் நடக்கிறதா என்றும், ஆளும் கட்சிக்கு கூட்டணியில் இருக்கின்றவர்கள் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று கைய அசைத்தபடி ஆவேசமாகவும் பேசினார்.
இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 3 மாணவிகளின் ஆபாச வீடியோ... அந்த ‘சார்’ ஒருவரிடம் பேசியது உண்மை... உறுதிப்படுத்திய மாணவி..! யாரைக் காப்பாற்ற முயற்சி..?