திமுக அரசை டிஸ்மிஸ் செய்யணும்... காரணத்தை அடுக்கிய அர்ஜூன் சம்பத்..!!
டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளியே தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் 2ஜி ஊழலையும் மிஞ்சிவிட்டது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட் நடமாட்டம் இருக்கிறது. இது குறித்து போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவர்களின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசின் கடன் பல மடங்கு உயர்ந்துவிட்டது. கடன்கார பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் உள்ளது. திமுக குடும்பத்தினரும் திமுகவினரும் நடத்தும் தொழில்கள் அனைத்தும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், திமுக அரசு மட்டும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளியே தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் 2ஜி ஊழலையும் மிஞ்சிவிட்டது.
இதையும் படிங்க: திமுக அரசின் பட்ஜெட் ஹிட்டா.? அட்டர் ஃபிளாப், சிம்ப்ளி வேஸ்ட்.. திமுக அரசை பஞ்சராக்கிய இபிஎஸ்.!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவார்கள் அதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்.
முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதியைக் கிளப்பி வருகிறார்கள். இதனால் இந்த விஷயம் தமிழகம் - கேரளம் இடையே நல்லுறவை சிதைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையே கம்யூனிஸ்ட் கட்சிகள் வேலையாக வைத்திருக்கின்றன." என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மூன்று மொழிகள் படிக்கக் கூடாது.. மூன்று வேளையும் சாராயம் குடிக்கலாம்.. திமுக அரசை போட்டுதாக்கிய வாசன்!!