×
 

“வஞ்சக பாஜக- துரோக அதிமுக” - கையில் துண்டு பிரசுரத்துடன் வீடு, வீடாக படையெடுக்கும் திமுக!

வஞ்சக பாஜக- துரோக அதிமுக  கூட்டணியிடமிருந்து தமிழகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட  துண்டு பிரசுரங்களை சேலம் அருகே கன்னங்குறிச்சி பேரூராட்சி  பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வீடு வீடாக வழங்கினார்

வஞ்சக பாஜக மற்றும் துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம் என்ற துண்டு பிரசுரங்களை  திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கினர்.

அரியலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வஞ்சக பாஜக துரோக அதிமுக கூட்டணியிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம், நீட் துரோகி அதிமுக என அச்சிடப்பட்ட  துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

 இதில் வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ் நாட்டுக்கு செய்த துரோக பட்டியல் என குறிப்பிட்டு நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரை பறித்தது மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளித்தது சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளித்தது, மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவளித்தது, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்தது என பல்வேறு தமிழ்நாட்டுக்கு எதிரான பாதகங்களுக்கு துணை போனவர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வால் இன்னுயிர் நீத்த மாணவர்கள்..! மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுகவினர் அஞ்சலி..!

 மேலும் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அடிமை அதிமுகவின் முகத்திரையை கிழித்து விரட்டி அடிப்போம் என அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவினர் வழங்கினர்.

 இதேபோல், சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சரமான ராஜேந்திரன் இன்று மாலை 4 மணியளவில் சேலம் அருகே கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் விநியோகம் செய்து,  பாஜக- அதிமுக கூட்டணியால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள், பஸ்களில் செல்லும் பயணிகளிடம் பாளையங்கோட்டை  எம்.எல். ஏ., அப்துல் வஹாப் துண்டு பிரசுரங்களை வழங்கினார். 
 

இதையும் படிங்க: என்டிஏ கூட்டணியிலேயே நாங்க தான் மாஸ்... காலரைத் தூக்கி விடும் ஜி.கே.வாசன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share