×
 

'விஜய், அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம்..? சமாதி கட்டும் கட்சி திமுக...' கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆவேசம்...!

இனி வரும் 50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது என திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இனி வரும் 50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது என திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தின் செங்கற்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுப்பேன் என பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வந்து பார்க்க சொல்லுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினே சவால் விட்டிருந்தார். இந்த சவாலால் சோசியல் மீடியாவில் மட்டுமல்ல பேட்டிகளிலும் திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆவேசத்துடன் எதிர் கருத்து கூறி வருகின்றனர். ஒருபக்கம் சோசியல் மீடியாக்களிலும் மாறி, மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்ததாகத் தான் வரலாறு உண்டு என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தீயாய் தயாராகி வருவதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க: 117/117 கேட்கும் விஜய்..! 60 ஐ தாண்டாத எடப்பாடி.. சேருமா? சேராதா?

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி, தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசும் போது, புதியதாக கட்சி தொடங்கியவர்கள் உடனடியாக முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள். கொள்கையை சொல்லி, அரசியலுக்கு வந்த காரணத்தை கூட சொல்லாமல் முதல்வராக நினைக்கிறார்கள். எம்ஜிஆர், சம்பத், வைகோ சென்ற போது கட்சி அழிந்து விடும் என கூறினார்கள். ஆனால் என்றைக்கும் நிலையாக இருக்கும் கட்சி திமுக. 

புதியதாக வந்தவர்கள் திமுகவை அழிப்பது கடமை என்கின்றனர். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று நினைவிடத்தில் உள்ளார்கள். திமுக இருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் அனைவருக்கும் நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர். 50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்ததுதான் வரலாறு எனக்கூறினார்.  
 

இதையும் படிங்க: நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? கமல் சொன்ன அந்த உண்மை... விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share