×
 

சாடிஸ்ட் அரசு..! பரிதாபங்கள் வீடியோ பார்த்து அறிக்கை விட்ட முதல்வர் மு.க ஸ்டாலின்..!

பரிதாபங்கள் வீடியோவை பார்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

மத்திய அரசை "சாடிஸ்ட்" அரசு என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மத்திய பிஜேபி அரசாங்கத்திற்கும், மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கும், இடையே ஏழாம் பொருத்தம் என்பது அனைவரும் அறிவர். இதில் மும்மொழி கொள்கையை அடிப்படையாக வைத்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் குறிப்பிட்ட நிதி வழங்க முடியாது என தெரிவித்து சென்று விட்டார். அதன் பிறகு விஷயம் சூடுபிடிக்க தொடங்கியது. துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான, உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கெட் அவுட் மோடி என்ற கோஷத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஆஷ்டாகை பாஜகவின் அண்ணாமலை மற்றும் அவரது தொண்டர்கள் 10 லட்சத்திற்கும் மேல் எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து அவர்களது எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: '1 மில்லியன் ட்வீட் அசிங்கத்துக்கு பழி தீர்க்க தெருவுல போய் கோலம்போடு...' குறுக்கே புகுந்த தவெக..!

இப்படி இரு தரப்பிலும் மாறி மாறி ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தை சொற்களால் பேசியும் கண்டனங்களை தெரிவித்தும் வரும் நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பங்குக்கு தற்போது சூட்டை கிளப்பி உள்ளார். 

நாடு முழுவதும் ரயில் பெட்டிகளில் அன் ரிசர்வ்டு முன்பதிவுல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைக்கும் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மத்திய அரசை சாடிஸ்ட் அரசு என குறிப்பிட்டுள்ளார். அதாவது சமூக வலைதளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம் அதை பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லா சாதாரண  பெட்டிகளை கூட்டுவார்கள் என்று பார்த்தால் வழக்கம் போல பரிதாபங்களை தான் மேலும் கூட்டி உள்ளது சாடிஸ்ட அரசு, நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து இரண்டு மடங்கு குறைக்கும் இந்திய ரயில்வேயின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 13 லட்சத்தை கடந்த #GetOutStalin..! 1 இல்ல 2-ப்பே... போட்டு பொளக்கும் பாஜக ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share