×
 

'இந்தி படித்தவர்களே இங்கு வந்து சித்தாள் வேலை தான் செய்கிறார்கள்...' திமுக எம்.பி,. ஆ.ராசா ஆவேசம்..!

தமிழும், ஆங்கிலமும் படித்து நம்முடைய பிள்ளைகள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இந்தி?

'இந்தி படித்தவர்களே இங்கு வந்து சித்தாள் வேலை தான் செய்கிறார்கள், ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் தெருவோரம் பானிபூரி விற்கிறார்கள்'' என மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை விமர்சித்துள்ளார் திமுக எம்.பி,. ஆ.ராசா.

இதுகுறித்து பேசிய அவர், ''தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் வரவில்லை. கேட்டால் ஹிந்தி படித்தால் தருகிறேன் என்கிறான். தமிழ்நாட்டில் இந்தி படித்தால் தான் பணம் கொடுப்போம் என்று சொல்லும் ஒன்றிய அரசை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எங்களுக்கு நிதி கொடுக்க விட்டாலும் பரவாயில்லை. எங்கள் மக்களுடைய மொழி, பண்பாட்டு கூறுகளை இழக்க மாட்டோம்.

நாங்கள் இரு மொழி கொள்கைதான் வைத்திருப்போம் என்கிற மனது துளிச்சல் உள்ள ஒரே முதலமைச்சர் இந்தியாவில் நம் முதலமைச்சரை தவிர வேறு யாரும் கிடையாது. இந்தி கற்றுக்கொள் என்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், இந்தி ஆட்கள் இங்கு வந்து சித்தாள் வேலை, கொத்தனார் வேலை செய்வதோடு, இங்கு வந்து பானிபூரி தான் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழும், ஆங்கிலமும் படித்து நம்முடைய பிள்ளைகள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இந்தி? என கேட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்'' என்றார்.

இதையும் படிங்க: ஆ.ராசாவுக்கு பெரும் சிக்கல்..! மீண்டும் 2 ஜி வழக்கு.. ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ..!

முன்னதாக கோவையில் பேசிய அவர், ''ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு எல்லா பணிகளையும் பார்த்துப் பார்த்து செய்யக்கூடிய ஆற்றல் மிக்க முதலமைச்சர் இன்றைக்கு நமக்கு இருக்கிற காரணத்தினால் இந்த திராவிட மாடல் ஆட்சியிலே எல்லோருக்கும் எல்லாம் என்கிற அந்த நிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே இந்த ஆட்சிக்கு துணையாக இருங்கள். முதலமைச்சருக்கு துணையாக இருங்கள். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் உங்களின் தேவைகளை நிச்சயமாக இந்த பகுதிக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ, மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ வந்து  செல்வேன்.

நான் இந்தியா முழுவதும் போய் வந்திருக்கிறேன். எனக்கு கிடைத்த நாடாளுமன்ற தொகுதியை போல எந்த தொகுதியும் கிடையாது. கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இருந்து நாலாவது கிலோமீட்டர் தாண்டாது. திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் வரை போகிறது. இந்தப் பக்கம் காமராஜர்புரம் பகுதி வரை செல்கிறது. அந்தப் பக்கம் வயநாடு ராகுல் காந்தி தொகுதியை போய் முட்டுகிறது. இவ்வளவு பெரிய தொகுதியில் ஏறி, இறங்குவது சாதாரண விஷயம் அல்ல. 

ஆனால், எப்படியாவது, எவ்வளவு வேலை இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய வேலை, கட்சியிலே துணைப் பொதுச் செயலாளர், பிறகு எனது சொந்த ஊர் என்று ஒன்று இருக்கிறது. என்னை முதலில் எம்.பி ஆக்கிய அந்த தொகுதி மக்கள் விட மாட்டேன் என்கிறார்கள். அளவுக்கும் மத்தியில் குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது உங்களை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெறுகிறேன் என்கின்ற அந்த உரிமையோடு உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நிச்சயமாக செய்து தருவேன் என்கிற உறுதியை வழங்குகிறேன்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share