கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தர மத்திய அரசு மறுத்த நிலையில், தேசிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக - பாஜக இடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் நின்றபாடில்லை. கல்விக் கொள்கை வாயிலாக இந்தியைத் திணிப்பதாக மத்திய அரசு மீது திமுக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இந்தியைத் திணிக்கவில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சவுத்ரியும் மறுத்து வருகின்றனர். தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் திமுக எம்.பி. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பதிவு ஒன்றை சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்தத் தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்?மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது." என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு 200 தொகுதியில் வெற்றியா.? அடுத்து பாஜக ஆட்சியில்... முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!
இதையும் படிங்க: தமிழகத்தில் மூன்று மொழிகள் படிக்கக் கூடாது.. மூன்று வேளையும் சாராயம் குடிக்கலாம்.. திமுக அரசை போட்டுதாக்கிய வாசன்!!