×
 

இந்தியை எதிர்ப்பீங்க..! டப்பிங் பட வருமானத்தை மட்டும் வாங்கிக்கலாமா..? திமுகவினரை விளாசிய பவன் கல்யாண்..!

இந்தி படங்களை தமிழில் டப் செய்து அதில் வரும் வருமானத்தை மட்டும் ஏற்கிறார்கள் என திமுகவை விளாசியுள்ளார் பவன்கல்யாண்.

இந்தியாவுக்கு பன்முக மொழிகள் தேவை. ஆனால், தமிழகத்தில் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால், இந்தி படங்களை தமிழில் டப் செய்து வரும் வருமானத்தை மட்டும் ஏற்கிறார்கள் என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான பவன் கல்யாண் திமுகவை விமர்சித்துள்ளார்.

ஜனசேனா கட்சி 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த கட்சியின் ஆண்டு விழா காக்கிநாடாவில் உள்ள பித்தாபுரம் தொகுதியில் நேற்று நடந்தது. ஜனசேனா கட்சிக்கு ஆதரவாளர்கள் தமிழகம்,ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா , தெலங்கானாவில் அதிகரித்து வருகிறது.

கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற தலைவர் பவன் கல்யாண் தனது தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

இந்தியாவுக்கு பன்முக மொழிகள்தான் நல்லது.இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழக அ ரசியல்வாதிகள், பிற மொழிகளில் தயாராகும் படங்களை தமிழில் டப் செய்யக்கூடாது. பல்வேறு மொழிகளில் வரும் படங்களை டப்செய்து அதை தமிழில் வெளியிட்டு வரும் வருமானத்தை மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா?

இதையும் படிங்க: 'ஹிந்தி மட்டுமல்ல, 10 மொழிகளை ஊக்குவிப்பேன்'... மு.க.ஸ்டாலினை கதறவிடும் ஆந்திர முதல்வர்…!

இந்து பாதுகாப்பாளர்  என்ற அடையாளத்தை விரும்புகிறேன். சனாதன தர்மா என்பது என் ரத்தத்தில் கலந்துள்ளது. இதை யாரிடமும் நிரூபிக்கத் தேவையில்லை, ஒவ்வொருவருக்கும் அவரின் மதத்தை கடைபிடிக்க சுதந்திரம் இருக்கிறது.

வசதிக்காக ஜனசேனா கட்சி இல்லை, வாக்கு வங்கிக்காக மதசுதந்திரத்தைப் பற்றி பேசவில்லை. போலியான மதசார்பின்மையாளர்கள், எந்த மதத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் கண்டிக்க வேண்டும், மவுனமாக இருக்கக்கூடாது. குஜராத் கோத்ராவில் நடந்த படுகொலைகள் தவறு. எப்போது நடந்தாலும் தவறு தவறுதான்.

இந்தியாவை தென்னிந்தியா, வடஇந்தியா என யாரும் பிரிக்க துணிச்சல் இல்லை. யாரேனும் இந்த முயற்சியில் இறங்கினால் என்னைப் போல் கோடிக்கணக்கான மக்கள் வெளியே வந்து போரிடுவார்கள். கடந்த 12 ஆண்டு கால கட்சிப்பணியில் நான் பல்வேறு அவமானங்களை, தனிப்பட்ட ரீதியில் இழப்புகளை சந்தித்தேன். இப்போதுதான் ஜனசேனா கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு ரூபாய் சின்னத்தை மாற்றியது என்பது அரசின் நிர்வாகத்தில் இருக்கும் உயர்ந்தவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ரூபாயின் சின்னத்தை தங்கள் மொழிக்கு ஏற்றார்போல் மாற்ற முடியாது.

நான் எப்போதும் சித்தாந்தங்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்கிறேன். அதனால்தான் தேசியப் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறேன். அரசியலுக்கு வந்தது வாக்கு வங்கிக்காக அல்ல சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்குதான். 

இவ்வாறு  பவன் கல்யாண் பேசினார்.
 

இதையும் படிங்க: திமுகவினர் பள்ளிகளில் மத்திய அரசின் மும்மொழி பாடத்திட்டம் ஏன்.? கருணாநிதியின் சமச்சீர் கல்விதானே இருக்கணும்.. ஹெச்.ராஜா கிடுக்கிப்பிடி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share