×
 

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் குறைவு...’ துரை வைகோவின் சல்சாப்பு... ஆதாரங்களை காட்டி செம ஆப்பு..!

எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கட்சிகளே இப்படி முட்டுக்கொடுப்பது வியப்பானது.  கூட்டணி என்பது தேர்தல் கால உடன்பாடு மட்டும் தான். இப்படி முட்டுக் கொடுப்பதற்கு தனியாக எதற்கு கட்சி?

பாலியல் குற்றங்களோ, போதை கடத்தலோ, கொலைச் சம்பவங்களோ நடந்தால், அதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு ‘‘அந்த மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்கள் குறைவுதான்’’ என சல்சாப்பு காட்டுவதே ஆளுங்கட்சி தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் வாடிக்கையாகிப் போய்விட்டது. 

‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் குறைவாக நடக்கிறது’’என எம்.பி., துரை வைகோ பேசியது எதிர்கட்சியினரை கடுப்பாக்கி உள்ளது. 

புதுக்கோட்டையில் பேசிய துரை வைகோ, ‘‘பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகயளவில் நடந்து வருகிறது. அதேபோன்று தலைநகர் தில்லி சட்ட-ஒழுங்கு பா.ஜ.க கையில் உள்ள நிலையில், அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை.  குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.


2024 ல் மட்டும் டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரிலே மக்களுக்கு பாதுகாப்பில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கையை தீவிர படுத்தப்பட வேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவரை 5 மணி நேரத்தில் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. மேலும் மாணவி பாலியல் புகாரில் தி.மு.க நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை எழுப்பி வருகிறார், இது முற்றிலும் தவறானது’’எனத் தெரிவித்தார். 

இதற்கு எதிவினையாற்றியுள்ள எதிர்த்தரப்பினர், ‘‘பாலியல் குற்றங்கள் குறைய, நிறைய என்பது கேள்வி அல்ல... பாலியல் குற்றங்களில் உங்கள் வீட்டு பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் வலி தெரியும். அப்போது குறைய, நிறைய எனப் பேசிக்கொண்டு இருப்பீர்களா..? 2022-ல் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தமிழகம் ஐந்தாவது இடம். 5000 குற்றங்களுக்கு மேல் நடந்திருகிறது. போக்ஸோ குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் நான்காவது இடம்.

குறைவாக நடக்கிறதா? அல்லது குறைவாகப் பதியப்படுகின்றதா.? எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கட்சிகளே இப்படி முட்டுக்கொடுப்பது வியப்பானது.  கூட்டணி என்பது தேர்தல் கால உடன்பாடு மட்டும் தான். இப்படி முட்டுக் கொடுப்பதற்கு தனியாக எதற்கு கட்சி? திமுக உடனே இணைந்து விடலாமே.!?   


தமிழ் நாட்டில் குறைவாகவே பாலியல் தொடர்பான குற்றங்கள் நடப்பதால் நடக்கும் குற்றத்தை மறைத்து விட வேண்டுமா என்ன? போகிற போக்கை பார்த்தல் தமிழ் நாடு முதல் இடத்தை பிடித்து விடும்’’ எனக் கொந்தளிக்கிறார்கள்.
 

இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜக பேசலாமா ..? துரை வைகோ பளீர் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share