×
 

உதயநிதி அமைச்சரவையில் துரைமுருகன்.. திமுக எம்.எல்.ஏ. பேச்சால் கலகலப்பான சட்டமன்றம்.!

உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் சிறப்பாக செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் பேசி அவையில் கலகலப்பூட்டினார்.

உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் சிறப்பாக செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் பேசி அவையில் கலகலப்பூட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்  சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம், சீர்காழி தொகுதியில், கொள்ளிடம் வடிகால் ஆற்றின் வலது கரையின் சாலையை சீரமைப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் பேசும்போது, “மூத்த அமைச்சர் துரைமுருகன், மு.கருணாநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்பட்டார். இப்போது தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏன், உதயநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்படுவார்” என பேசினார்.



இதை கேட்டதும், பேரவையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு. அப்பாவு, “நீங்கள் பேசியது எல்லாம் சரிதான், ஆனால், அவரை மூத்தவர் என கூறியது மட்டும் தவறு. அவர் இன்றும் இளையவர்தான்” எனக் கூற, மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பின்னர் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். “பன்னீர்செல்வம் பழைய காலத்து ஆள். அவர் பேசியது எல்லாமே சரிதான். அந்தத் தொகுதியில் போராடி, சவால் விட்டு வெற்றி பெற்றவர். மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி முழுமைக்கும் புனரமைப்பு பணி மற்றும் கால்வாய்களில் தானியங்கி தண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த விரிவான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ.9.98 கோடியில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரிவான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

உதயநிதி அமைச்சரவையின் நான் பணியாற்றுவேன் என்று அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்புகூட மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தின்போதும் துரைமுருகன் பேசியிருந்தார். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. இவ்வாறு பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இ.கம்யூ. ஒரு நாள் ஆட்சி அமைக்கும்.. ஆசையை வெளிப்படுத்திய திமுக கூட்டணி கட்சி.!

இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share