செங்கோட்டையனுக்கு ஜூலை வரை கெடு... எடப்பாடியின் அமைதிக்குப் பின் காத்திருக்கும் பூகம்பம்...!
எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் விஷயத்தில் ஜூலை வரை பொறுத்திருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் விஷயத்தில் ஜூலை வரை பொறுத்திருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் விகே சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி ஏற்கனவே ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் நிலையில், செங்கோட்டையனின் பிரச்சனை வேறு பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்தித்த நிலையில், அடுத்த நாளே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது.
2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தை என்பது கடந்த வாரம் தொடங்கியிருந்தது. இதற்காக டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்து ஊர் திரும்பியிருந்தார். ஆனால் அவர் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக பேசவில்லை எனக்கூறியிருந்த நிலையில், அமித் ஷா பேச்சுவார்த்தையை தொடங்கி நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ரத்தத்தை தேடும் அட்டை… செங்கோட்டையனுக்கு திடீர் துதி... ஆர்.பி.உதயகுமாரின் அநியாய வேஷங்கள்..!
இந்த சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக செங்கோட்டையன் ரகசியமாக மதுரையிலிருந்து டெல்லி சென்று அங்கு நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு ஊர் திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. எடப்பாடி பழனிச்சாமியுடன் அமித் ஷா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில், அதில் சில முக்கியமான சில உடன்பாடுகள் எட்டப்படாத ஒரு காரணத்தினால் செங்கோட்டையினை வைத்து அடுத்த கட்டமாக காய் நகர்த்துவதற்கான வேலைகளில் டெல்லி பாஜக மேலிடம் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனிடையே, செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்கி விடுங்கள் என்ற ஆலோசனையும் எடப்பாடி பழனிசாமி காதுகளை எட்டியதாம். ஆனால் எடப்பாடியோஏப்பா அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஜூலை மாசம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கு செங்கோட்டையின் மட்டுமில்லாம அவரது ஆதரவாளர்களின் வாக்கு ரொம்ப முக்கியம் எனக்குறிப்பிட்டுள்ளாராம்.
இதையும் படிங்க: ஏமாற்றிய எடப்பாடியார்… துருப்புச் சீட்டாக மாறிய செங்கோட்டையன்… பாஜகவின் ஆறாத ரணம்..!