×
 

அதை பத்தி வாயே திறக்கக்கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட எடப்பாடி..!

பாஜகவுடன் கூட்டணி அமைந்த பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம், ஜெயகுமார், ஆர்.பி உதயகுமார், செம்மலை, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்கவும், கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சாப்பாடு போட்டு.. அதிமுக எம்எல்ஏ-க்களின் 'இலை'க்கு அடியில் வேட்டு வைத்த இ.பி.எஸ்..!

குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி குறித்து கட்சியினர் யாரும் கருத்து கூறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படும் மூத்த நிர்வாகி செங்கோட்டையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்காத அவர் கூட்டம் முடிந்தவுடன் முதல் நபராக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அதிமுக பாஜக கூட்டணியை அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வருகின்ற தேர்தலில் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும் என்கின்ற ஆலோசனைகளையும் அறிவுரையும் பொதுச்செயலாளர் வழங்கியதாக கூறினார். பாஜக அதிமுகா கூட்டணி சிறப்பாக இருப்பதாகவும், வெற்றி உறுதி என மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்ததாகவும் கூறினார். 

இதையும் படிங்க: அடிச்சு தூக்கு..! 2026 நம்ம காலம்.. மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் கொடுத்த உத்வேகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share