×
 

டி.டி.வி.தினகரனை நெருங்கும் எடப்பாடியார்... அதிமுக மீது நொறுங்கும் பாஜகவின் நம்பிக்கை..!

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அதில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க மாட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாக்கில் சுத்தமில்லை எனக் கொதிக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். மூச்சுக்கு முன்னூறு முறை, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனச் சொன்ன எடப்பாடி பழனிசாமியின் பிடி டெல்லி பாஜக தலைமையிடம் சிக்கிக் கொண்டது. இதனால் டெல்லிக்கு ஓடிச்சென்று கூட்டணியில் சேர்ந்து கொள்கிறோம் என டெல்லிக்கு ஓடினார். 

தமிழகம் திரும்பிய நிலையில் உடனடியாக கூட்டணியை உள்ளூர எடப்பாடியார் மறுத்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவே மிரண்டு போய் விட்டார். இனியும் இப்படியே விட்டுடக் கூடாது என சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என பகிரங்கமாக அறிவித்துடன், கூட்டணி ஆட்சி அமைப்போம் அமைப்போம் என அதிரடியாக அறிவித்தார்.

 

அப்போது மேடையில் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஐந்து நாட்களுக்கு பிறகு, கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொல்லவேயில்லை என மறுத்தார். இதனை கேட்டதும் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.  முன்பு பொதுக்குழு, செயற்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி இனிமேல் பாஜவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என அறிவித்தார். ஆனால், தற்போது பொதுக்குழுவை கூட்டாமல் தன்னிச்சையாக பாஜவுடன் கூட்டணி சேர்ந்து விட்டோம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!

அதுவும் கூட்டணி ஆட்சி  என ஊரைக்கூட்டி சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கூட்டணி அமைச்சரவை இல்லை என கூறுவது அவர் மீதிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிட்டது என பாஜக நிர்வாகிகள் குமுறுகின்றனர். அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் கொஞ்சம் நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “அதிமுகவின் கொடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர்.

இதனால் சசிகலா தரப்பு மிகவும் அதிர்ச்சியாகி இருக்கிறது. இதற்கிடையில் ''வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அதில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க மாட்டார். கட்சியை சசிகலாதான் வழிநடத்துவார்'' என சசிகலா தரப்பு அடித்துக் சொல்கிறது.

இதையும் படிங்க: பாஜக அடிமைகள் பேச்சை காதுலையே வாங்க மாட்டோம்... அதிமுகவை அடித்து துவைத்த திமுக அமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share