×
 

2026 வெற்றிக்கு தொடக்கப்புள்ளி தான் இந்த வெற்றி.. அடித்து சொல்லும் அன்பில் மகேஷ்..

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு 2026 ஆம் ஆண்டு நடக்கப் போகும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான தொடக்க வெற்றி புள்ளியாக அமைந்திருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர் மொழி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திருமண விழா முன்னேற்பாடுகளைக் கவனிக்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. நாளை மறுநாள் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்திலின் மகனும், மாநகர திமுக அமைப்பாளர் கணேஷின் திருமண விழா நடைபெறுகிறது.

இந்த விழாவானது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தன்று வர முடியாத காரணத்தால், முதல் நாளான நாளை மாலை இரவு 7 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை

இந்த ஆய்வின் போது, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர். அப்போது  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு 2026 ஆம் ஆண்டு நடக்கப் போகும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான தொடக்க வெற்றி புள்ளியாக அமைந்திருக்கிறது என்றார்.

இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share