×
 

என்னங்கடா வித்தை காட்டுறீங்க..? துர்கா ஸ்டாலின் இனி எத்தனை கோயிலுக்கு போனாலும் சரியாகாது: ஹெச்.ராஜா

சினிமாவில் விஜய் என்னவெல்லாம் செய்தார் என்று அண்ணாமலை ஏற்கெனவே சொல்லிவிட்டார். நான் திருப்பி சொல்ல கூடாது.

''இந்த ஆட்சிக்கு ஆண்டவன் மிகப்பெரிய ஆபத்தை உறுதி செய்து விட்டான். ஆண்டவன் புண்ணிய ஸ்தலங்களில் தினந்தோறும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது'' என பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், ''இந்த ஆட்சிக்கு ஆண்டவன் மிகப்பெரிய ஆபத்தை உறுதி செய்து விட்டான். ஆண்டவன் புண்ணிய ஸ்தலங்களில் தினந்தோறும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. சகோதரி துர்கா ஸ்டாலின் இனிமேல் எத்தனை கோயிலுக்கு சென்றாலும் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த அம்மா எல்லா கோயில்களுக்கும் சென்று வருகிறார். அதை நான் பாராட்டுகிறேன்.

ஆனால், தீய சக்திகள், இந்து விரோதிகளை நான் கேட்கிறேன்... கோவிலுக்கு போனால் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கிறீர்கள். சேகர் பாபுவினுடைய அறநிலைத்துறை உள்ளே போவதற்கு நுழைவு கட்டணம், உள்ளே போய் சாமியை கும்பிட வேண்டும் என்றால் தரிசன கட்டணம், அதன் பிறகு தேங்காய் உடைக்க வேண்டும், நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்றால் அர்ச்சனை கட்டணம், அதற்கு அடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு கட்டணம். திருச்செந்தூரில் ஒரு அபிஷேகத்திற்கு எவ்வளவு தெரியுமா 2500 ரூபாய் வாகங்குகிறார்கள்.

இதையும் படிங்க: மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு.. தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி மனு..!

இந்துக்களின் பணத்தை இவ்வளவு கொள்ளை அடிக்கிறீர்களே..? அவர்களின் பைகளில் கையை விட்டு திருடுகிறீர்களே... அரக்கத் துறை ஆகிவிட்டது அறநிலையத்துறை. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கவில்லை. மிகப்பெரிய தர்மவான் ஷிவ் நாடார் திருச்செந்தூர் கோவிலுக்கு 300 கோடி கொடுத்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இவரைப் போல ஒரு கொடை வள்ளல் இருக்க முடியாது. அந்த பணத்தை எல்லாம் என்ன செய்வீர்கள்? உங்கள் வாயில் போட்டுக் கொள்வீர்களா?

ஒரு ஜேசிபி 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் எத்தனை ஏசி, எத்தனை டிசி, கிரேட் 1, 2, 3 இத்தனை பேர் லட்சம் லட்சமாக கோடி கோடியாக சம்பாதிக்கிறீர்களே? பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர மாட்டீர்களா? தவெக முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்த வேண்டும். டெபாசிட் வாங்க வேண்டும். அதுவே உங்களால் முடியாது. சினிமாவில் விஜய் என்னவெல்லாம் செய்தார் என்று அண்ணாமலை ஏற்கெனவே சொல்லிவிட்டார். நான் திருப்பி சொல்ல கூடாது. இடுப்பை கிள்ளி ஆட்டம் போட்டுக்கொண்டு என்னங்கடா வித்தை காட்டுறீங்க..?'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர் திருவிழா அனைவருக்கும் சமம்..! யாருக்கும் முன்னுரிமை கிடையாது.. கோர்ட் அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share