ஸ்டைலா கெத்தா..! ட்ரம்புக்கு நேருக்கு நேர் அமர்ந்த ஜெய்சங்கர்...! பதவியேற்பில் இந்தியாவுக்கு தனி மரியாதை!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் முதல் வரிசையில் அமரவைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் முதல் வரிசையில் அமரவைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்பிற்கு தலைமை நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வாஷிங்டன் டிசி-யில் உள்ள கேப்பிட்டல் எனப்படும் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தான் பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், இம்முறை அதிக குளிர் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபுள்யூ புஷ், இந்திய வம்சாவளியான முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர்பிச்சை, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அலுவலர் டிம் குக் போன்ற தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி - டிரம்ப் இடையிலான நெருக்கம்:
இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டின் அதிபர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், பிரதமர் மோடி பங்கேற்காதது உலக அளவில் பேசு பொருளாக மாறியது. அந்த அளவிற்கு டிரம்ப் - மோடி இடையே நல்ல நட்பு நிலவி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வந்த மறுகணமே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலில் வாழ்த்துக்கூறிய நபர் பிரதமர் மோடி தான் என செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்
கடந்த முறை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த போது, இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் அதிக நெருக்கம் காட்டினார். இருநாட்டு தலைவர்களின் பயணங்கள், சந்திப்புகள் என அனைத்துமே உலக நாடுகளால் உற்றுநோக்கும் அளவிற்கு சிறப்பானதாக இருந்தது. 2021ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட ஹவுடி மோடி என்ற பிரச்சார நிகழ்ச்சியை டிரம்ப் முன்னெடுத்திருந்தார். ஆனால் இதுதான் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு பாதகமாக அமைந்ததாக கூறப்பட்டது.
அதனால் இந்தமுறை தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் எங்கும் அவரது பெயரைக் கூறவில்லை, பெரிதாக பேசவில்லை எனக்கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் தான். குறிப்பாக அமெரிக்காவில் அனைத்திற்கும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற டிரம்பின் சித்தாந்தம், இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஒப்பந்தங்கள் முதல் ஏற்றுமதி வரை அனைத்தையுமே பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் தான் டிரம்ப் இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
தவிடு பொடியான வதந்திகள்:
உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யுகங்களும், வதந்திகளும் தற்போது வைரலாகி வரும் ஒற்றை புகைப்படத்தால் தவிடுப்பொடியாகியுள்ளன.
வாஷிங்டன் டிசி-யில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய் சங்கர் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில், முதல் ஆளாக இருக்கை தரப்பட்டிருந்தது. அங்கிருந்து நேருக்கு நேர் டொனால்ட் டிரம்ப்பை பார்த்த படியே செம்ம கெத்தாக ஜெய்சங்கர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“இந்தியாவை டிரம்ப் புறக்கணிக்கிறார்...மோடி-டிரம்ப் இடையிலான நட்பு முறிந்துவிட்டதா? என்னவானது?” என்றெல்லாம் வலம் வந்து கொண்டிருந்த வதந்திகள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இந்த ஒற்றை புகைப்படமே டிரம்ப் இந்தியாவிற்கு எவ்வளவு மதிப்பளித்துள்ளார் என்பதையும், தனது நண்பரான பிரதமர் மோடியின் சார்பாக பதவியேற்பு விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்த அளவிற்கு தனி மரியாதை கொடுத்துள்ளார் என்பதையும் பறைசாற்றியுள்ளது.
முதல் வரிசையில் ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவாவுடன் ஜெய்சங்கர் அமர்ந்திருக்கிறார். இரண்டு வரிசைகள் பின்னால், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயாவும், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கும் அமர்ந்துள்ளனர். ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இரண்டும் QUAD இன் ஒரு பகுதியாகும், இதில் இந்தியா மற்றும் அமெரிக்காவும் அடங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து கூறிய மோடி:
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகப் பதவியேற்றதற்காக தனது "அன்பான நண்பர்" டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
"எனது அன்பு நண்பர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள்! நமது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன். எதிர்காலத்தில் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள்!" என்று டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அவருடன் நட்புறவைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மோடி அரசால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து.. உதயநிதி பரபரப்பு பேச்சு..