பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..!
பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை உருவாக்க வேண்டும் என எம்.பி பவுசியா கான் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள்,பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில் தேசிய அளவில் பள்ளி பேருந்து, வேன்களுக்கான போக்குவரத்து கொள்கையை உருவாக்க வேண்டும், பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் என்சிபி சரத்பவார் கட்சி எம்.பி.பவுசியா கான் வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் பவுசியா கான், பள்ளிப் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவதால், அவற்றுக்காக தனியாக போக்குவரத்துக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
இதையும் படிங்க: இந்தியாவை ‘இந்து பாகிஸ்தான்’ ஆக பாஜக மாற்றுகிறது.. சஞ்சய் ராவட் காட்டமான விளாசல்..!
அவர் பேசுகையில் “பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று இந்தியச் சட்டங்களில் இல்லை. பள்ளிப் பேருந்துகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என சில மாநில அரசுகள் மட்டும் உத்தரவிட்டுள்ளன, ஆனால், தேசிய அளவில் இல்லை. உலகளவில் அதிகளவில் வாகன விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், தேசிய அளவில் பள்ளிப் போக்குவரத்து பாதுகாப்புக்கென தனியாக பாதுகாப்பு கொள்கை இல்லை.
பள்ளி வாகனங்களான பேருந்து, வேன்களுக்கு நிலையான தரக்கொள்கையை சில மாநிலங்கள் வகுத்துள்ளன. ஆனால், அவை தொடர்ந்து காகித்தில்தான் இருக்கின்றன, நடைமுறைக்கு கொண்டுவருவது கடினமாகவே இருக்கிறது. அதேபோ ஆட்டோக்கள், இ-ரிக்ஸாக்களுக்கென தனியாக விதிமுறைகள் இல்லை, இந்த வாகனங்களிலும் குழந்தைகள் செல்லும்போது அதற்கும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் தேவை.
இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். தேசிய அளவில் போக்குவரத்து கொள்கையை உருவாக்கி, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பாதுகாப்பு விதிகளைஅமல்படுத்த வேண்டும். பள்ளிப் பேருந்துகள், வேன்களில் மாணவர்களுக்கென தனியாக சீட்பெல்ட் கட்டாயம் என்று கொள்கையில் கொண்டுவர வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிப் பேருந்திலும் கண்காணிப்பு கேமிரா, ஜிபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மட்டுமல்லாது, ஆட்டோக்கள், வேன்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளையும் கட்டாயமாக்க வேண்டும். பள்ளிப் பேருந்துகள் செல்லும் வேகம், அதற்கான கட்டுப்பாடு, பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றை நிலையானதாக வகுக்க வேண்டும்.
இவ்வாறு பவுசியா கான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..!