இனி இதற்கும் கட்டணம் கிடையாது... மகளிருக்கு மற்றொரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவைச் சார்ந்த பெண்களுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி செய்யயும் பொருட்களை அந்த பகுதியிலிருந்து அதனை சுற்றியுள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்ல இலவச சுமை பயணச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் தன்னம்பிக்கை மற்றும் அவருடைய ஊக்கத்தை வளர்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல இனிவரும் காலங்களில் இந்த பேருந்துகளில் வந்து 100 கிலோ மீட்டர் தூரம் வரை 25 கிலோ கொண்ட எடை பொருட்களை மகளிர் சுவை குழு கொண்டு செல்லலாம். அதற்கு பல்வேறு வந்து வழிகாட்டு நெறிமுறைகளுமே தற்போது போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனியும் உங்க நாடகம் எடுபடாது.. தமிழக அரசின் பழைய ஓய்வூதிய திட்ட குழு தொடர்பாக புட்டுப் புட்டு வைத்த ராமதாஸ்.!
வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
அனைத்து நகர பேருந்துகளுமே ஏசி பேருந்துகள் நீங்களாக இந்த சேவையை மகளிர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டணம் மற்றும் புறநகர் பேருந்தில் சுய உதவி குழுக்கள் 25 கிலோ வரையிலான அந்த சுமைகளை மட்டும் 100 கிலோ மீட்டர் வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் எடுத்துச் செல்லக்கூடிய அந்த சுமைகளை மற்ற பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் எடுத்துச் செல்ல நடத்துனர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அதேபோல பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தெளிவாக அந்த அறிக்கையில் வந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடிய மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய பொருட்களை பெரிய சுமைகளான பொருட்களை வந்து பேருந்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நடத்துனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளை பாதிக்கக்கூடிய ஈரமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது போல பல்வேறு கட்டுப்பாடுகளும் பல்வேறு அறிவுறுத்தல்களும் நடத்துனர்களும் ஓட்டுனருக்கும் போக்குவோர் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக மகளிர் விடியல் பேருந்துகள் அவருக்கு அந்த கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்குவது போலவே, பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் அந்த சுமை எடுத்துச் செல்லக்கூடிய டிக்கெட்டுகளையும் கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!