×
 

விரைவில் பொது சிவில் சட்டம்: விதிமுறைகளை ஏற்றது உத்தரகாண்ட் அமைச்சரவை...

பொது சிவில் சிட்டம்(யுசிசி) குறித்த விதிகள் குறித்து உத்தரகாண்ட் அமைச்சரவை இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்மாநிலமாக பொது சிவில் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து வரலாற்று ரீதியாக முடிவெடுத்துள்ளது. இந்த பொது சிவில் சட்டம் விரைவில் மாநிலத்தில் அமலுக்குவரும் எனத் தெரிகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 26ம்தேதி பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டம் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.


ஆனால், மாநிலத்தில் எப்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.அதேசமயம், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசு துறைகள் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன, அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பல வாரங்கள் முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்பு கூறுகையில் “ 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வரும். அனைத்து நடைமுறைகளும் முழுமையாக முடிந்துவிட்டால், சுதந்திரத்துக்குப்பின், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.


திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, சொத்துரிமை, தத்தெடுத்தல், பரம்பரை சொத்து உள்ளிட்டவை குறித்த பல்வேறு தனிநபர் சட்டங்களைக் கொண்டுள்ளதாக பொது சிவில் சிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வோருக்கு இடையே பிறக்கும் குழந்தைக்குகூட சொத்தில் சமபங்கு உரிமை இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மதம், சாதி அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சீரான சட்ட கட்டமைப்பை நிறுவுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். இருப்பினும், மாநிலத்தின் பழங்குடி சமூகங்கள் தங்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் சட்ட மரபுகளை ஒப்புக்கொண்டு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை;"வாழ்வின் கடைசி நாள் வரை ஜெயிலில் இருக்கும்படி"அதிரடி உத்தரவு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு உத்தரகாண்ட் ஆணையர் அஜெய் மிஸ்ரா அளித்த பேட்டியில் “ பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின்,அனைத்து அதிகாரிகளும் இதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு அதிகாரிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து இதில் செயல்படுவார்கள். இந்த செயல்பாட்டு முறை முற்றிலும் டிஜிட்டல் மயமானது, வெளிப்படையானது, எளிதாக அணுகக்கூடியது, பயனாளிகள் அதிகம் வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை தடையற்றது, ஆவணங்கள் காணாமல் போனால் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை, தங்கள் ஆவணங்கள் குறித்து உறுதியாக தெரியாத குடிமக்கள் உதவிக்கு ஒரு பொது சேவை மையத்தை அணுகலாம். வெளிப்படைத்தன்மை, தகவல் வருதல், எளிமை ஆகியவைதான் யுசிசி போர்டலின் தனித்தன்மை. ஆட்டோ-மோட் முறையில் இந்த செயல்படும், குறிப்பிட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டால் தானாகவே மற்ற தகவல்களை பெற்றுக்கொள்ளும்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் தடை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share