×
 

நண்பா ரெடியா...! தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு தேதி வெளியானது... இடம் எங்கு தெரியுமா?

பிப்ரவரி 26ல் சென்னையில் தவெகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிப்ரவரி 26ல் சென்னையில் தவெகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஈசிஆர் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஈசிஆரில் உள்ள கன்ப்ளுயன்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தற்போது தகவல் அறிவிக்கப்பெற்றிருக்கிறது. 

தமிழக வெற்றிக் கழகத்துடைய முதல் பொதுக்குழு கூட்டமானது வருகிற 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இடத்தேர்வு வந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து நடைபெற்றது. முதலில் நந்தனத்தில் இருக்கக்கூடிய ஒஎம்சி மைதானத்தில் நடத்துவதற்காக திட்டமிட்டார்கள், ஆனால் அதற்கு அனுமதி கேட்கும்போது காவல்துறை அனுமதி உள்ளிட்ட என்ஓசி வந்து முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் அந்த அனுமதி வந்து மறுக்கப்பட்டது.  

இதையும் படிங்க: தவெகவுக்கு வந்த சோதனை… சென்னைக்கு வெளியே அனுப்பப்பட்ட நிர்வாகிகள்… குழப்பத்தில் விஜய்..!

இந்த நிலையில் தான் ஈசிஆர் பகுதியில் இருக்கக்கூடிய கான்ஃபிடன்ஸ் கன்வென்ஷன்    சென்டரில் வந்து ஆய்வு செய்தார்கள். குறிப்பாக இந்த வேலையை வந்து மூன்று பேரிடம்  விஜய் கொடுத்திருந்தார். அந்த கட்சியுடைய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூவரிடம் கொடுத்திருந்தார். அவர்கள் மூவரும் சென்று அந்த இடத்தை வந்து ஆய்வு செய்தார்கள். இந்நிலையில் தான் தேதியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 26 ஆம் தேதி நடைபெறலாம் என்று வந்து தகவல்கள் வெளியாகி வந்தன, ஆனால்  பொதுக்குழுவை நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஈசிஆரில் உள்ள கான்ஃபிளின்ஸ் கன்வென்ஷன் சென்டரில்  பொதுக்குழுவை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். அதாவது பொதுக்குழு மற்றும் கட்சியுடைய ஆண்டு விழா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக நடந்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாட்டிக்கின்னாரு ஒருத்தரு... ஜான் ஆரோக்கியசாமியுடன் சீமான் வைத்த கூட்டு... நாதகவுக்கு தவெக வைத்த குட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share