முதல்வர் இதைச் செய்யாதது தமிழக மகளிருக்கு அவமானம்... அமைச்சரின் ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ பேச்சை டார்கெட் செய்த ஜி.கே.வாசன்.!
திராவிட மாடல் ஆட்சி என்பது ஒரு அமைச்சரின் அநாகரிகமான பேச்சுக்கு மக்கள் தலைகுனிய கூடிய மாடலாக உள்ளது என தமாக கட்சி தலைவர் ஜி.கே வாசன் குற்றச்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமாக கட்சி தலைவர் ஜி.கே வாசன் கலந்துகொண்டு தேர்தல் பணிகளில் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திராவிட மாடல் ஆட்சி என்பது ஒரு அமைச்சரின் அநாகரிகமான பேச்சுக்கு மக்கள் தலைகுனிய கூடிய மாடலாக உள்ளது. இதற்காக அமைச்சரை இன்னும் ராஜினாமா செய்யக்கூடிய சூழ்நிலையில் முதலமைச்சர் ஏற்படுத்தவில்லை. இது தமிழக மகளிருக்கான அவமானம் அவமரியாதை என குறிப்பிட விரும்புகிறேன் ” என்றார்.
கூட்டணி குறித்து பாஜக அதிமுக இறுதி முடிவு எடுக்கும், தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் உள்ளது. இன்னும் சில மாதங்களில் கூட்டணி வலுபெறும் முழு வடிவம் பெறும். தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கண்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறுகிறது. மடியில் கணம் இருப்பவர்களுக்கு வழியிலே பயம்தான் வரும் .
இதையும் படிங்க: என்டிஏ கூட்டணியிலேயே நாங்க தான் மாஸ்... காலரைத் தூக்கி விடும் ஜி.கே.வாசன்...!
ஆளுகின்ற கட்சியின் கூட்டணி கட்சிகளும், ஆளும் கட்சியும் தமிழக மக்களை மதித்தால் வெளி மாநிலங்களில் தமிழகத்தில் தலைகுனிவு ஏற்படக்கூடாது என நினைத்தால் ஆபாசமாக பேசிய அமைச்சரை தட்டி கேட்க வேண்டும். அவர்களை ராஜினாமா செய்யக்கூடிய துணிவு கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டும் .திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் தொடர் மழை காரணமாக மக்காச்சோளம் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
திமுக தான் எனது முதல் எதிரி என த.வெ.க தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு?, அவர் முதலில் களத்தில் வரவேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள்தான் எஜமானர்கள் மக்கள் முடிவு தான் இறுதி முடிவு. 2026 இல் த.ம.க தற்போது இருக்கின்ற வெற்றி கூட்டணி ஆட்சியை அமைக்கும் என கூறினார்.
இதையும் படிங்க: சொத்து வரியை உயர்த்தி பாமர மக்களை வஞ்சிக்காதீங்க.. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!