×
 

ஜீரோ எம்.எல்.ஏ.வில் ஹாட்ரிக் அடித்த ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்...! காங்கிரஸை கதற விட்ட எச்.ராஜா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஜீரோ எம் எல் ஏக்கள் என்பதை மூன்றாவது முறையாக உறுதிப்படுத்தியுள்ள ராகுல் காந்தி பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வாழ்த்து தெரிவித்துத்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதமாக கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர்.

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்ததை கொண்டாடும் விதமாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய எச்.ராஜா, தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தொடர் வெற்றிகளை பெற்ற போதும், சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வந்தது. இந்த ஆண்டு தேர்தல் பணிக்காக டெல்லி சென்றிருந்தேன். முந்தைய தேர்தல் காலங்களில் குழந்தைகள் கூட கையில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான தொடப்பத்தோடு இருப்பார்கள். அந்த அளவிற்கு அந்த கட்சி பிரபலமாக இருந்தது. இந்த முறை அந்த பிரபலத்தை பார்க்க முடியவில்லை. எனவே, இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என நான் தெரிவித்து இருந்தேன். 1993 ஆம் ஆண்டு பா.ஜ.க 43 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து இருந்தது. இன்று 48 சதவீதம் பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம், இந்த வெற்றிக்கு காரணம், பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் மக்கள் மனதை தொட்டு உள்ளது என்பது தான்.

மேலும் ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மோசமாக பேசிய கருத்துக்கள் ஆகியவற்றை மக்கள் ரசிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஹரியானா அரசு யமுனா நதியில் விஷம் கலந்ததாகவும் டெல்லி மக்களை இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை மக்கள் ரசிக்கவில்லை. கட்சி ஆரம்ப கட்டத்தில் ஆரம்பித்த போது மிகவும் எளிமையாக இருந்தவர்கள் இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர். குறிப்பாக கெஜ்ரிவாலின் வீட்டு கழிவறையில் தங்க பிளேட் வைக்கும் அளவிற்கு ஊழல் செய்துள்ளார். சாராய எக்ஸ்சைஸ் டூட்டி ஊழல் நிரூபிக்கப்பட்டு உள்ளது. வாக்கு இயந்திர கோளாறு, ரைடு, கைது என ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இப்போது சிலர் பேசலாம். சாராய ஊழலை முதலில் முன் வைத்தது காங்கிரஸ் தான். அதை தொடர்ந்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் பா.ஜ.க விற்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்ட முயற்சி.. எச்.ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்க தயாராகும் காவல்துறை! 

மேலும், ஜீரோ எம் எல் ஏ என்பதை ஹாட்ரிக்காக வாங்கிய ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச துரோகியாக மாறி கருத்துக்களை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி துடைத்து எரியப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு தமிழ்நாட்டின் திராவிட தலைவர்கள் உட்பட பலர் உதாரணமாக இருந்தாலும், கெஜ்ரிவால் அதில் முதன்மையானவர். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற திடமான முடிவை டெல்லி மக்கள் எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இதையும் படிங்க: “உயிரைக் கொடுத்தாவது... சிக்கந்தர் தர்காவை இடம் மாற்றியே தீருவேன்...” - கொந்தளிக்கும் எச்.ராஜா! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share