×
 

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.. திமுக வழியில் விஜய்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தமிழக மக்களுக்கு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள‌ வாழ்த்துச் செய்தியில், “பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள். 2026-இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று வாழ்த்து செய்தியில் விஜய் கூறியுள்ளார். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக 2009இல் திமுக அரசு அறிவித்தது. பின்னர் 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அந்த அறிவிப்பை ரத்து செய்தது. என்றாலும் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியுடன் பரிமாறிக்கொள்வது திமுகவினரின் வழக்கமானது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. என்றாலும் திமுக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

தற்போது திமுக வழியில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை நடிகர் விஜய் கூறியுள்ளார். ஏற்கனவே திமுகவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக நடிகர் விஜயை பாஜக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் திமுக பாணியில் நடிகர் விஜய் தமிழ்ப் புத்தாண்டு கூறியிருப்பது விவாதமாகுமா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “யார் அந்த மேடம்?” - விஜய்யை வசமாக சிக்க வைத்த ஜான் ஆரோக்கியசாமி...! அடுத்த ஆடியோ லீக்!

 

 

இதையும் படிங்க: திமுக- அதிமுகவை ஒழித்து... சீமான் -விஜய் அரசியல் மக்களுக்கு இருட்டுக்கடை அல்வாதான்… நீலம் போட்டு வெளுத்த ப்ளூசட்டை மாறன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share