×
 

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..!

ஆந்திராவில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை தண்டிக்க மனமில்லாமல், தலைமை ஆசிரியர் ஒருவர் தனக்கு தானே தண்டனை வழங்கி, மாணவர்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.

மாணவர்கள் தங்களது வாழ்வில் வெற்றியடைய ஆசிரியர்கள் ஆற்றும் பங்கு அளப்பறியது. அதிலும் குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள், துவக்க கல்வி ஆசிரியர்கள் சிறுவர்களிடத்தில் பெற்றோர் காட்டும் அன்பையும் பரிவையும் குரு காட்டும் கண்டிப்பையும் வழிகாட்டுதலையும் சேர்த்தே வழங்குவர். அப்படிப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நமது நெஞ்சில் நீங்காமல் இடம் பிடித்திருபார்கள் என்பது நிதர்சன உண்மை. பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பள்ளி கால நினைவுகளும் நம் அனைவரின் மனதிலும் பசுமையாக பதிந்திருக்கும். ஆசிரியர்களின் அன்பான பேச்சும், நிதானத்துடன் அமைந்த கண்டிப்புமே நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்..

அவ்வாறு ஆந்திர மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை திட்ட மனமில்லாமல், தண்டிக்க விருப்பம் இல்லாமல் தன்னை தானே வருத்தி தோப்புக்கரணம் போட்டுக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. மாணவர்கள் வேண்டாம் சார் ப்ளீஸ் சார் என கெஞ்சிய போதும், நீங்க நல்லா படிங்க போதும் என சொல்லியபடியே தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் போட்ட காட்சி இணையத்தில் வைரலானது. தலைமை ஆசிரியரின் இந்த வித்தியாசமான அன்பு கலந்த நடைமுறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆந்திரா மாநில கல்வி அமைச்சரே தலைமை ஆசிரியரை வாழ்த்தி உள்ளார். 

இதையும் படிங்க: வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் போப்பிலி மண்டலம் பென்டா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்  தலைமை ஆசிரியராக  ரமணா பணி புரிந்து வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தலைமை ஆசிரியர் ரமணா, மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். காலை கூட்டு பிரார்த்தனை முடிந்ததும், மாணவர்களை கலைந்து செல்லாமல் அங்கேயே நிற்க சொன்ன தலைமை ஆசிரியர் ரமணா மாணவர்கள் இடத்தில் உரையாற்றினார். 

மாணவர்களே! கல்வியே உயர்வு தரும். ஆனால் நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தாமல்நடந்து கொள்கிறீர்கள். எங்களால் உங்களை அடிக்க முடியாது, திட்டவும் முடியாது, எங்களால் எதுவும் செய்ய முடியாது. வேறு என்ன தான் செய்ய முடியும். உங்களுக்கு பதிலாக எங்களை நாங்களே தண்டித்து கொள்ளத் தான் முடியும் என்று கூறினார். அதுபோல மாணவர்களைத் தண்டிக்காமல் தனக்கு தானே தோப்புகரணம் போட்டு கொண்டு தண்டனை அளித்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் ஒருவர் தோப்புக்கரணம் போட்டதும், தலைமை ஆசிரியரே தன்னைத்தானே தண்டித்து கொண்டதும் மாணவர்களை உருக செய்தது. வேண்டாம் சார், ப்ளிஸ் சார் என மாணவர்கள் கெஞ்சினர். 

இந்த வீடியோ சமூகவளைதளத்தில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ்  நமது அரசுப் பள்ளிகளில் ஆசிரியரின் வீடியோ பார்த்தேன். நம் அரசு பள்ளி  குழந்தைகளை ஊக்குவித்தால்  சாதனைகளை  செய்வார்கள்.  அவர்களை தண்டிக்காமல் புரிந்து கொள்ளும் உங்கள் சுய ஒழுக்கமான அணுகுமுறை நல்ல யோசனை, வாழ்த்துக்கள்.  அனைவரும் சேர்ந்து கல்வித் தரத்தை உயர்த்துவோம்.  நம் குழந்தைகளின் கல்வி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உழைத்து, அவர்களின் பொன்னான எதிர்காலத்திற்கு வழி வகுப்போம் என பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: 3வது குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரம், பசுவும் கன்றும்... ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share