கடும் போட்டி.. பாஜகவின் புதிய முதலமைச்சர் யார்??? வெளியாகப் போகும் புதிய பெயர்..
டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதூரி உள்ளிட்ட 6 பேர் போட்டி.
டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையைத் தாண்டி 43 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றிபெறும் சூழல் ஏறத்தாழ முடிவாகி விட்டது. அடுத்தபடியாக டெல்லியின் முதலமைச்சராக பாரதிய ஜனதாவில் இருந்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர், பாஜகவில் யார் என்ற விமர்சனத்தை ஆம் ஆத்மி எழுப்பி இருந்தது. அந்த கேள்விக்கு பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது.
நியூடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கிய பர்வேஷ் வர்மா முதலமைச்சர் பொறுப்புக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷாகிப் சிங் வர்மாவின் மகனாவார். மேலும் 2 முறை மேற்கு டெல்லி தொகுதியில் இருந்து எம்.பி.யாக பாஜக சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தையும் தாண்டி டெல்லியின் பெரும்பான்மை சமூகமான ஜாட் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இவர் முதலமைச்சர் ஆக கூடுதல் வாய்ப்பு என்கிறார்கள்.
இதையும் படிங்க: டெல்லியில் அடுத்த முதல்வர் யார்? முன்னுரிமை பட்டியலில், பர்வேஷ் வர்மா உள்ளிட்ட 5 பேர்
அதேபோன்று டெல்லி முதலமைச்சர் அதிஷாவை கல்காஜி தொகுதியில் வீழ்த்தி இருக்கும் ரமேஷ் பிதூரியும் பாஜகவின் முதலமைச்சர் பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், பிரசாரங்களில் தங்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா என்று ஆம் ஆத்மி அடிக்கடி வம்புக்கு இழுத்ததை இவரைத்தான்.
ஆம் ஆத்மி ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து கடந்த ஆண்டு திடீரென அதில் இருந்து விலகி பாஜக பக்கம் தாவியவர் கைலாஷ் கெலாட். யமுனை நதியை விட அதிக கலப்படம் ஆகிவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். ஊழலில் திளைக்கும் ஆம் ஆத்மி என்று பிரசாரத்தில் ஆதாரங்களுடன் இவர் பேசியது டெல்லி மக்களையும், பாஜக தலைமையையும் ஒருங்கே கவர்ந்தது. இவரும் முதலமைச்சர் பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளாராம்.
இதேபோன்று ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த அரவிந்த் சிங் லவ்லி, டெல்லி பாஜகவின் மூத்த தலைவரான விஜேந்தர் குப்தா ஆகியோரின் பெயர்களும் முதலமைச்சர் வாய்ப்பு பட்டியலில் உள்ளதாம்.. யாருக்கு யோகம் என்பது இன்றே தெரிந்து விடும்..
இதையும் படிங்க: 27 ஆண்டுகளுக்குப் பிறகு கதவை திறந்து விட்ட டெல்லி மக்கள்..! பரவசத்தில் குதிக்கும் பாஜக...!