வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானம், சாலை போக்குவரத்து பாதிப்பு
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளன.
இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் நூறடி தூரம் வரை கூட பார்க்க முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்தது. விமான ஓடுபாதையும் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நீடித்தது.
இதனால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 250க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதத்திற்கு உள்ளாகின. ஐந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா..? வார்த்தையில் வறுத்தெடுத்த வானதி..!
இன்று காலை 5:30 மணி அளவில் டெல்லியில் வெப்பநிலை 10 . 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் 1300 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் சாலைகளிலும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன. டெல்லியின் நொய்டா, குரு கிராம் மற்றும் லக்னோ, ஆக்ரா, காஜியாபாத், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பனி மூட்டத்தினால் மிகக் குறைந்த வேகத்தில் தான் வாகனங்கள் இயக்கப்பட்டன.
பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான அடர் பணி காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டன.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலும் 40 விமானங்கள் தாமதம் ஆனதுடன் 5 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!