ஹீரோ ஒர்ஷிப்... சாப்பாட்டு மெனுவை விளம்பரம் செய்து அசிங்கம்: இதுதான் பொதுக்குழுவின் லட்சணமா..?
தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இங்கு கட்சிகள் உள்ளன.
''தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இப்போது வரும் புதிய கட்சிகள் உள்ளதாக மூத்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''இங்கே தமிழ்நாட்டில் கட்சிகளின் பொதுக்குழுக் கூட்டங்களைப் பார்த்தால் அல்லது அதனுடைய மாநாடுகளைப் பார்த்தால் மாநாட்டுக்கு வரும் 2500 பேர்களுக்கு இன்னின்ன உணவுகள் வழங்கப்படும் என்று மெனுப் பட்டியல்களை பிரச்சாரத் தட்டிகளாக அவர்களே ஊடகங்கள் தோறும் வைக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. அல்லது மக்களை, தொண்டர்களை என்னவாக கணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை
இதையும் படிங்க: டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!
.
பொதுக்குழுவில் என்ன கொள்கைகள் என்ன திட்டங்கள் என்ன எதிர்கால உண்மையான நடைமுறைகள் என்பதுபற்றி எதுவுமே இவர்கள் சொல்வதும் இல்லை. அவற்றை முன் பெரியாக செயல் திட்டங்கள் வைப்பதும் இல்லை. இது வெறும் சம்பிரதாயம்தான். பதிலாக நீங்கள் பொதுக் குழுவிற்கு வந்தால் என்னென்ன வகை உணவுகள் கிடைக்கும் என்று பட்டியலைப் போட்டு மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் 10, 15 ஆண்டுகளாக கட்சிப் பொதுக்குழு மாநாடுகளில் நடந்து வருகிறது.
குடும்ப வாரிசுகளின் அரசியலுக்கு தோதாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன்றி வேறென்ன? தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஹீரோ ஒர்ஷிப்பாக எக்காளமாக, கிளர்ச்சியாக மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி மயக்கமூட்டும் இந்திய அரசியல் இப்படியாகத்தான் அதன் வழியில் போய்க் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு பிறந்த வாரிசுகளுக்குமான அரசியலாகவும் இது தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதை மன்னராட்சி என்று சொல்லாமல் வேறு என்ன வகையில் வகைப்படுத்துவது? இதெல்லாம் இன்றைக்கு மிக முக்கியமாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அல்லது இத்தகைய போக்குகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டிய நடைமுறையாகவும் அதற்கான புதிய அரசியல் மாற்றங்களும் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இங்கு கட்சிகள் உள்ளன. இரங்கல் தீர்மானம் ஒரே தீர்மானம் தனியாக முதலில் வாசித்து விட்டு சில எல்லோரும் எழுந்து நின்று அமைதி சில நொடிகள் அமைதி காக்க வேண்டும். பின் பொது தீர்மானங்களை முன் மொழிந்து பின் வழி மொழிய வேண்டும். இது மரபு. இவை எல்லாம் இன்றைய புதிய கட்சிகளுக்கு தெரியவில்லை. இப்படிப்பட்ட ஆலோசகர்கள், நிர்வாகிகள் அங்கு உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காரில் வருபவர்களுக்கு பதவி கிடையாது... ஆதவ் அர்ஜுனாவை மறந்து பொய்களை அள்ளி வீசிய புஸ்ஸி ஆனந்த்...!