மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம்..! அரசின் முடிவால் மராத்திய மக்கள் அதிர்ச்சி..!
மராத்திய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தி இருக்கிறது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 3 ஆவது மொழியாக இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோரை மீறி திருமணம் செய்தால் போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது.. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு..!
இதையும் படிங்க: இரவில் கேட்ட அதிபயங்கர சத்தம்.. அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. நாட்டு வெடி தயாரித்தவரின் கதி..?