×
 

தமிழரான விவேக் ராமசாமியை சந்தித்த மோடி..! விரைவில் கவர்னராக வாழ்த்து!

பிரதமர் மோடியை இங்கு வரவேற்பது மகிழ்ச்சியாகவும், மரியாதையாகவும் இருந்தது. அவருக்கு ஒரு அற்புதமான வருகை அமைய வாழ்த்துக்கள்.

இந்திய வம்சாவளி தொழிலதிபரும், குடியரசுக் கட்சித் தலைவருமான விவேக் ராமசாமி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பிளேர் ஹவுஸில் ஒரு 'சிறந்த சந்திப்பு' நடந்ததாகவும், அமெரிக்காவில் பிரதமரை வரவேற்பது 'மகிழ்ச்சி மற்றும் மரியாதை' என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அற்புதமானதாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் உறுதிப்படுத்தினார். ''பிரதமர் மோடியை இங்கு வரவேற்பது மகிழ்ச்சியாகவும், மரியாதையாகவும் இருந்தது. அவருக்கு ஒரு அற்புதமான வருகை அமைய வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த சந்திப்பு என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு விவேக் ராமசாமி தெரிவித்தார். ஓஹியோ மாகாணத்தில் கவர்னர் வேட்பாளராக விவேக் ராமசாமி களமிறங்க உள்ளார். ''விரைவில் கவர்னராக வாழ்த்துகள்'' என பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்க உறவுகள், புதுமை, உயிரி தொழில்நுட்பம் குறித்து ராமசாமியுடன் விவாதித்தார். "இன்று பிளேர் ஹவுஸில் விவேக் ராமசாமியுடன், பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா-அமெரிக்க உறவுகள், புதுமை, உயிரி தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்முனைவோரின் பங்கு குறித்து ஆழமான விவாதங்களை நடத்தினர்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வங்கதேச விவகாரம்...மோடி கையில் லகானை கொடுத்த டிரம்ப்… இனிதான் வேட்டையே ஆரம்பம்..!

விவேக் ராமசாமி, முன்னதாக அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்தார். ஆனால் இறுதியில் போட்டியிலிருந்து விலகினார். தனது வெளிப்படையான விவாத நிகழ்ச்சிகளால் கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தனது அமெரிக்க அதிபர் முயற்சியை முடித்துக்கொண்டு, "21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க அதிபர்" என்று  டொனால்ட் டிரம்பிற்கு தனது ஆதரவை வழங்கினார்.

விவேக் ராமசாமி எலோன் மஸ்க்குடன் அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின்  இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், பின்னர் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலிருந்து அமெரிக்காவிற்கு சென்றவர்கள். விவேக் ராமசாமி ஓஹியோவில் வளர்ந்தவர். அவரது தந்தை தனது இந்திய பாஸ்போர்ட்டை இன்னும் வைத்துள்ளார்.
 

இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உங்களுக்குப் பகடை காயா.? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் திருப்பதி நாராயணன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share