×
 

ஹார்ன் அடிச்சது குத்தமா? சாலையில் வித்தை காட்டிய டியோ இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த கொடூரம்..

வேலூர் அருகே பைக்கில் செல்லும் போது ஹார்ன் அடித்து வழிவிடும் படி கேட்ட முதியவரை தாக்கியதாக மூன்று பேரை போலீசார் கைதுச் செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். வயது 55. நேற்று சிவராத்திரி என்பதால் திருவிழாவை கொண்டாடுவதற்காக காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்குவதற்காக மார்க்கெட் சென்றுள்ளார். மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தனது டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல். வண்டியில் வந்துள்ளார். பில்டர் பெட் சாலையில் வரும்போது, அவருக்கு முன்பு டியோ ஸ்கூட்டரில் சென்ற மூன்று இளைஞர்கள் பாதையை மறைத்தபடி அங்கும் இங்குமாக வண்டியை ஓட்டியுள்ளனர்.  சிறுது நேரம் அவர்களின் பின்னாலே சென்ற வெங்கடேஷன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துள்ளார். வண்டியில் ஹார்ன் அடித்து, முன்னால் சென்ற இளைஞர்களை கூப்பிட்டுள்ளார்.

ஆனால் அதை காதிலே வாங்கிகொள்ளாத இளைஞர்கள் மீண்டும், பாதையை அடைத்தபடி டியோவை அங்கும் இங்குமாக ஓட்டியுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற வெங்கடேசன் தொடர்ந்து விடாமல் ஹார்ன் அடித்துள்ளார். இதனால் கடுப்பான இளைஞர்கள், வண்டியை நிறுத்தி உள்ளனர். வெங்கடேஷன் அருகில் சென்று, ஏன் இப்படி வண்டி ஓட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். நீ எதுக்குயா இப்படி விடாமல் ஹார் அடித்து தொல்லை செய்கிறாய் எனக்கேட்டு இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெங்கடேசனும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன்... தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு..!

அதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்கள் வெங்கடேசனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் வெங்கடேசனும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் மூன்று இளைஞர்களும் வெங்கடேசனை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்து கீழே மயங்கி விழுந்ததுள்ளார். அதன்பிறகு அந்த மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய 3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மக்கான் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (20), தோட்டப்பாளைத்தை சேர்ந்த அஜய் (26), ஜவகர் (26) என தெரியவந்தது. 3 பேரையும்  கைது செய்த  போலீசார், 103 பிரிவின் கீழ்  கொலை வழக்கு, மற்றும் ஆபாச வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share